அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் (சோழபுரம்)

God Name : கைலாசநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

ஈஸ்வர பட்டம் பெற விரும்பிய சனி பகவான், சிவபெருமானை தரிசிக்க காத்திருந்தார். பிருங்கி முனிவர் கூறிய யோசனைப்படி திருவண்ணாமலை வந்து உமையன்னையின் அருள் வேண்டி தவமிருந்து அன்னையின் தரிசனம் கிடைக்கப்பெற்றார். பின்னர் சோழபுரம் வந்த சனி பகவான் அமாவாசையும் கரிநாளும் கூடிய ஒரு தினத்தில், கருப்பு சாந்து திலகமணிந்து, சிவபூஜை செய்யும் கோலத்தில் சிவபூரணியை தரிசித்தார். சிவபெருமானின் நெற்றிக்கண்ணை ஒட்டி இருக்கும் சாந்தை எடுத்து ஒரு சிறு லிங்கமாக உருவாக்கி சனி பகவானிடம் தந்தாள் உமையன்னை. இந்த லிங்கத்தை பூஜிக்கமாறு பணித்தாள் உமையன்னை. அதுவே த்ரியம்பக நேத்ர லிங்கம். இந்த லிங்கத்தை முறைப்படி பூஜித்து ஈஸ்வர பட்டம் பெற்ற சனி பகவான் சனீஸ்வரர் ஆனார். தமக்கு ஈஸ்வர பட்டம் கிடைக்க வழி காட்டிய அன்னையின் சந்நிதி வாசலிலேயே இருக்க அனுமதி பெற்று, அதன்படி அங்கேயே இருப்பதாக ஸ்தல வரலாறு. வெள்ளிக்கிழமைகளிலும், பூரம், அவிட்டம், அனுஷம், சுவாதி நட்சத்திர தினங்களிலும் சிவபூரணிக்கு அபிஷேகம் செய்வது உகந்தது. அமாவாசை (அ) கரி நாட்கள், மற்றைய தினங்களின் சனி ஹோரையில் சனீஸ்வரருக்கும், த்ரியம்பக நேத்ர லிங்கத்திற்கும் அபிஷேகம் செய்வது சிறந்தது என்பர்.
மூலவர்: கைலாசநாதர், அம்பாள்: சிவபூரணி. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் கைலாசநாதர். தேஜோமயமாக ஒளி வீசும் மிகப் பெரிய திருமேனி. சுவாமி கோஷ்டத்திலுள்ள திருவுருவங்கள் அனைத்தும் அழகாக உள்ளன. தரிசிக்க சந்தோஷம் பெருகும் அழகிய தோற்றம் கொண்ட அம்பாள் சிவபூரணி மிகுந்த வரப்பிரசாதி. சிவபூரணியிடமிருந்து தோன்றியவளே சந்தோஷி மாதா எனக் கூறுவர். அம்பாள் கோஷ்டத்தில் பார்வதி, கஜலட்சுமி, ஞானசரஸ்வதி மற்றும் விஷ்ணுதுர்க்கை ஆகிய தேவியர்களை தரிசிக்கலாம். அம்பாளின் முகமண்டபத்திலுள்ள த்ரியம்பக நேத்ர லிங்கம் எனப்படும் முக்கண் மாலீஸ்வரரை வணங்கியபடி சனீஸ்வரர் மற்றும் நாகர் விக்ரகங்கள் இடம் பெற்றுள்ளன. அபூர்வமான தோற்றத்தில் யோக தட்சிணாமூர்த்தி காணப்படுகிறார். வலக்காலை கீழே தொங்கவிட்டு இடக்கரத்தை முழங்கால் மீது வைத்து வித்தியாசமான கோலம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.