அருள்மிகு கோடீச்சுரர் திருக்கோவில், கொட்டையூர்
God Name : ஸ்ரீ கோடீச்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
ஹேரண்டம் என்றால் ஆமணக்கு. ஆமணக்கு செடிகள் மிகுதியாக இருந்ததால் ஹேரண்டபுரம் எனப் பெயர் கொண்டது. ஆமணக்கு கொட்டைச் செடியின் அடியிலிருந்து இறைவன் தோன்றியதால் இவ்வூர் கொட்டையூர் என்றானது. கொட்டைச் செடி எனும் ஆமணக்கு செடியின் கீழிலிருந்து லிங்கம் வெளிப்பட்டதாக ஐதீகம்.
ஹேரண்டம் எனப்படும் கொட்டை மரத்தினடியில் அமர்ந்து தவம் செய்பவர் ஹேரண்ட (அ) ஏரண்டமுனிவர் எனப் பெயர் பெற்றார். அத்ரி மகரிஷி மரபில் தோன்றியவர். ஆத்ரேயர் எனும் பெயரினர். இத்தலத்தில் மணலால் லிங்கம் ஒன்றை அமைத்து, அமுத கிணற்று நீரில் முழுக்காட்டி மகிழ்ந்து இறைவனை வழிபட்டவர்.
திருவலஞ்சுழி பகுதியில் ஆதிசேஷனால் நிலம் பிளவுபட்டு பாதாளம் உண்டாயிற்று. காவிரி ஆறு அந்த பாதாளத்தில் புகுந்து பூமிக்கு மேல் வராமல் போயிற்று. பாதாளத்திற்குள் ஒரு அரசனோ அல்லது முனிவரோ இறங்கி தம்மை பலியிட்டுக் கொண்டால், அவர்களை உள்வாங்கி காவிரியை வெளியே விடுவதாக அசரீரி வாக்கு ஒலித்தது.
பள்ளத்தில் இறங்க ஆயத்தமான அரசனை தடுத்து விட்டு, தாமே இறங்கி உயிர் தியாகம் செய்தார் ஏரண்ட முனிவர். உடனே பள்ளமும் மூடியது. காவிரியும் வெளி வந்தது. திருவலஞ்சுழி பள்ளத்தில் இறங்கிய முனிவர் கொட்டையூரில் வெளிவந்து கோடீச்வரரை வழிபட்டு முக்தியடைந்தார் என வரலாறு.
தேவாரத் திருத்தலம்.
மூலவர்: ஸ்ரீ கோடீச்வரர், அம்பாள்: பந்தாடு நாயகி எனப்படும் கந்துக க்ரீடாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ கோடீச்வரர். லிங்க பாணம் முழுவதும் ஆமணக்கு கொட்டைகள் ஒட்டிக் கொண்டது போன்ற தோற்றம், அதாவது ஒரே லிங்கத்தில் எண்ணற்ற சிறிய லிங்கங்கள் தெரிகின்றன. பத்ர முனிவர்க்கு கோடி லிங்கங்களாக காட்சி தந்ததால் கோடீச்வரர் எனும் திருநாமம் கொண்டார்.
தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் அம்பாள் பந்தாடு நாயகி நின்ற கோலத்தில் தரிசனம் தருகின்றாள். அட்ச மாலையும், தாமரை மலரும் ஏந்திய மேற்கரங்கள், அபய - வரத முத்திரைகளைக் கொண்டுள்ள கீழ்க்கரங்கள் ஆகியவற்றுடன் கூடிய அழகான திருவுருவம். வடமொழியில் கந்துக க்ரீடாம்பிகை என்று அழைக்கின்றனர். கந்துகம் என்றால் பந்து, க்ரீடம் என்றால் விளையாட்டு. கோடியம்மை என்ற திருநாமமும் உண்டு.
வலச்சுற்றில் கோவில் கொண்டுள்ள கோடி விநாயகரின் திருமேனியில் பல விநாயகர் வடிவங்களை தரிசிக்கலாம். கோடி விநாயகரை வழிபட்டால் ஞாபகமறதி இருக்காது, நினைவாற்றல் கூடும் எனக் கூறுவர். வலது கோடியில் கஜலட்சுமி மற்றும் அஷ்டபுஜ துர்க்கை திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்ட கோடி சுப்ரமண்யர் தேவமயிலுடன் காட்சி தருகின்றார்.
மஹாமண்டபத்தில் விநாயகர், பிரதோஷ நாயகர், சோமாஸ்கந்தர், அஸ்திர தேவர், ஹேரண்ட முனிவர், நால்வர், மஹா சாஸ்தா, பைரவர், சூரியன், சனீஸ்வரர், நடராஜப் பெருமான், மற்றும் பிட்சாடனர் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
இத்தலத்திலுள்ள நவகிரகங்கள் அவரவர் வாகனங்களுடனும், எந்திரங்களுடனும் காணப்படுகின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.