அருள்மிகு கபர்த்தீஸ்வரர் திருக்கோவில் / வெள்ளை விநாயகர் கோவில் (திருவலஞ்சுழி)

God Name : மூலவர்: கபர்த்தீஸ்வரர்் சிறப்பு மூர்த்தம்: ஸ்வேத விநாயகர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

தேவர்களும் அசுரர்களும், விநாயகப் பெருமானை வழிபடாது பாற்கடலை கடையத் தொடங்கினார்கள். அதன் விளைவாக ஆலகாலவிஷம் வெளிப்பட்டது. உடனே தேவர்கள் கடல் நுரை பிள்ளையார் ஒன்றை உருவாக்கி பூஜித்தனர். ஆலகால விஷத்தை பரமேஸ்வரன் விழுங்கி தேவர்களை காப்பாற்றினார். அந்த கடல் நுரை பிள்ளையாரை தேவேந்திரன் தனது நித்ய பூஜா மூர்த்தியாக கொண்டு தினமும் வழிபட்டான். சாப விமோசன நிவர்த்தி பெற பூலோகம் வந்தபோது தன்னுடனேயே இந்த கடல் நுரைப் பிள்ளையாரையும் எடுத்து வந்தான். இத்தலத்திற்கு வந்தபோது இங்கு வைத்து அவரை பூஜித்தான். பின்னர் திரும்ப எடுக்க முடியாமல் போனது. இங்கேயே நிலை கொள்ள தீர்மானித்து விட்டார் பிள்ளையார் எனக் கருதி தேவலோகம் சென்றான் இந்திரன். விநாயக சதுர்த்தி தினத்தன்று ஆண்டுதோறும் வந்து வழிபட அனுமதி பெற்று சென்றான் இந்திரன். சிவராத்திரி தினத்தன்று நான்கு ஜாமங்களில், நான்கு ஸ்தலங்களில் சிவபூஜை செய்வதற்காக ஆதிசேஷன் பூலோகம் வந்தபோது, பாதாளத்திலிருந்து ஒரு பிலத்தின் (பள்ளத்தின்) வழியாக வந்தான். அந்த பிலத்தில் காவிரி ஆறு இறங்கி பாதாளம் சென்று விடுகிறது. ஒரு முடித்தலையோ (அரசன்) ஒரு சடைத்தலையோ (முனிவர்) பாதாளத்தில் இறங்கி உயிர்த்தியாகம் செய்தால், காவிரி வெளியே வரும் என அசரீரி கேட்கிறது. அருகேயுள்ள கொட்டையூரில் தவம் மேற்கொண்டிருந்த ஹேரண்ட முனிவர் தம்மையே தியாகம் செய்ய முன்வந்து பாதாள பிலத்தில் இறங்கினார். காவிரியும் மீண்டு வந்தது என ஸ்தல வரலாறு. மகிஷனை சம்ஹாரம் செய்த ஹத்தி (தோஷம்) நீங்க, துர்கை இத்தலம் வந்து ஸ்வேத விநாயகரை வழிபட்டதாக கூறப்படுகிறது. காவிரி மேலே பொங்கி வந்த இடம் மேலைக் காவேரி எனப்படுகிறது. ஹேரண்ட முனிவர் பிலத்தில் இறங்கியதும் காவிரி வலஞ் சுழித்து மேலே எழுந்தது. இதன் காரணமாக இவ்வூருக்கு திருவலஞ்சுழி எனப் பெயர் ஏற்பட்டது. காவிரி நதி வலஞ் சுழித்து ஓடி இவ்விறைவனை வழிபட்டதால் திருவலஞ்சுழி எனப் பெயர் கொண்டது. தேவாரத்திருத்தலம்
மூலவர்: கபர்த்தீஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: ஸ்வேத விநாயகர், அம்பாள்: ப்ரஹந்நாயகி. ராஜ கோபுரத்தைக் கடந்ததும் வரும் வாசலின் மேல் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். அதனருகே உள்ள வில்வ மரத்தடியில் ஸ்தல விநாயகர் தனிக் கோவில் கொண்டுள்ளார். ஸ்வேத விநாயகர் எனும் திருநாமம். கடல்நுரைப் பிள்ளையார், வெள்ளை விநாயகர் என்றெல்லாம் அழைப்பார்கள். வெண்மை நிறமாயிருப்பதால் இப்பெயர் கொண்டார். கடல் நுரை கொண்டு உருவாக்கப்பட்டவர். தீண்டாத்திருமேனி. பச்சைக் கற்பூரம் மட்டும் சாத்துவார்கள். எவ்வளவு தேன் அபிஷேகம் செய்தாலும் உறிஞ்சிக் கொள்ளும் திருமேனி. வெண்மை நிறம் மாறாமலேயே இருப்பவர். உற்சவரான ஸ்ரீ வாணி - ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்வேத விநாயகர் மிகுந்த வரப்பிரசாதி. பஞ்ச மூர்த்தி வாசலுக்கெதிரே உள்ள மண்டபத்தில் அரிய வேலைப்பாடுகளையுடைய கற்பலகணி ஒன்று உள்ளது. ஒன்பதடி உயரமும், ஏழடி அகலமும் கொண்டு பதினாறு துளைகளுடன் கூடிய அழகான பலகணி. வாழைப்பூ வடிவத்திலுள்ள கருங்கல் குத்து விளக்கு அற்புதமாக உள்ளது. தமிழக சிற்பிகள் ஏதாவது கோவிலை நிர்மாணிக்கத் துவங்கும் முன், சில மாதிரி திருப்பணிகளை குறிப்பிட்டு, அவை நீங்கலாக மற்றவற்றை செய்து தருகிறோம் என குறிப்பிடுவார்களாம். அவை: 1. ஆவுடையார் கோவில் கொடுங்கை, 2. திருவீழிமிழலை வெளவா நெத்தி மண்டபம், 3. திருநனிப்பள்ளி கோடிவிட்டம், 4. தஞ்சை பெரிய கோவில் விமானம். அந்த வரிசையில் திருவலஞ்சுழி பலகணியையும் குறிப்பிடுவார்களாம். 24 வித விநாயகர்களின் வடிவங்களை இங்கு தரிசிக்கலாம். அருணகிரிநாதர் புகழ்ந்து பாடிய முருகப் பெருமான், நந்திகேஸ்வரர், அஷ்டபுஜ காளி, ஸ்தல பாலகரான பைரவர், திருமணக்கோலத்தில் விஷ்ணு - லட்சுமி, மூலையில் சனீஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கபர்த்தீஸ்வரர். சடைமுடிநாதர், வலஞ்சுழிநாதர், கற்பக நாதேஸ்வரர், த்ரிணாவர்த்தர் ஆகிய திருநாமங்களும் இவருக்கு உண்டு. பிரஹந்நாயகி எனப்படும் பெரியநாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். வண்டுவார் குழல்மங்கை என்ற பெயரும் உண்டு. கோஷ்டத்தில் காணப்படும் நடராஜ மூர்த்தி, பிட்சாடனர் ஆகிய திருவுருவங்கள் மிகவும் அழகானவை.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.