அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் (சுவாமிமலை)

God Name : மூலவர்: சுவாமிநாதன்் உற்சவர்: ஆறுமுகன்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

சூரபத்மன் மீது படையெடுத்துச் சென்றபோது முருகப் பெருமான் தங்கிச் சென்ற ஸ்தலம். இது அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடு. ஸ்வாமியாகிய சிவபெருமானுக்கு குருநாதராக இருந்து பிரணவம் உபதேசிக்க முருகன் எழுந்தருளிய மலை என்பதால் 'ஸ்வாமிமலை' எனப் பெயர் கொண்டது. 'ஏறு' போன்று முருகன் அமர்ந்ததால் இதை 'ஏரகம்' என்பர். 'ஏறு' என்றால் அழகு எனப் பொருள். கைகட்டி வாய் புதைத்து ஒரு சீடனின் நிலையில் சிவபெருமானும், பிரணவத்தை உபதேசிக்கும் குருவாக முருகனும் அமர்ந்து, யோகத்திலிருந்த ஸ்தலம். சாப விமோசனம் பெற இங்கு வந்த பூமி தேவி விமோசனம் பெற்றதும், முருகனைப் பிரிய மனமில்லாமல் இங்கு நெல்லி மரமாக இருப்பதாக ஐதீகம். பிறவிக் குருடன் ஒருவன் உணவின்மையால் பட்டினி கிடந்து இங்குள்ள விநாயகரை வந்து தொழுதான். உடனே கண் கிடைக்கப் பெற்றான். இவனுக்குக் கண் கொடுத்தவரே 'நேத்ர விநாயகர்' எனப்படுகிறார். இந்திரனை எதிர்த்த அரிகேசன் எனும் அசுரனை வெல்ல வரம் வேண்டிய இந்திரன் இத்தலம் வந்து முருகனை வழிபட்டு வன்மை பெற்றான். அப்போது தனது ஐராவதத்தை இங்கு நிறுத்திவிட்டுச் சென்றதால், இங்கு முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. முருகனின் பாத தரிசனம் அருணகிரிநாதருக்கு கிடைக்கப் பெற்ற ஸ்தலம். இது அறுபடை வீடுகளில் ஒன்று - அநாகத ஸ்தலம்.
மூலவர்: ஸ்வாமிநாதன், உற்சவர்: வள்ளி - தெய்வயானை உடனாய ஆறுமுகன். ஸ்கந்த புராணத்துடன் தொடர்புடைய அழகிய சிற்பங்களுடன் பரிமளிக்கும் அழகிய ஐந்து நிலை ராஜ கோபுரம். அதைக் கடந்து உள்ளே சென்றதும், தனிக் கோவிலில் மீனாட்சி - சுந்தரேசரை தரிசிக்கலாம். அடுத்துள்ள வசந்த மண்டபமருகே மலையடிவாரமும், ஸ்தல விருட்சமான நெல்லி மரமும், வஜ்ர தீர்த்தமும் உள்ளன. மலை உச்சி ஏறுவதற்கு 60 படிகள். 'பிரபவ' எனத் தொடங்கி 60 ஆண்டுகளின் பெயர்களைக் கொண்ட படிகள். இவை 'வருஷத் தேவர்கள்' என அழைக்கப்படுகின்றன. ஸ்கந்த புராணத்துடன் தொடர்புடைய வண்ண ஓவியங்கள் படிச்சுவர்களில் தீட்டப்பட்டுள்ளன. 60 அடி (18மீ) உயரமுள்ள குன்று. படிகள் ஏறிச் சென்று கொண்டிருக்கையில் இரண்டாம் பிரகாரத்தை அடையலாம். அதில் எழுந்தருளி தரிசனம் தரும் 'நேத்ர விநாயகர்' எனப்படும் கண் கொடுத்த விநாயகரை தரிசித்து ஆசி பெற்று, மேலே ஏறிச் சென்று மூன்றாம் பிரகாரத்தை சென்றடையலாம். மூன்றாம் பிரகாரத்திலுள்ள மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ளார் 'ஸ்வாமிநாதன்' எனப்படும் தகப்பன்சுவாமி. ஆறடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. தண்டம் ஏந்திய கரமும், வரத ஹஸ்தமும் கொண்டுள்ளார். பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் அழகிய தோற்றம். விபூதி அபிஷேகத்தில் ஞானியாகவும், சந்தன காப்பில் பாலசுப்ரமண்யராகவும் தோற்றமளிக்கின்றார். சந்நிதிக்கு முன்பாக மயிலுக்கு பதில் யானை வாகனம் காணலாம். நவவீரர்கள், இடும்பன், அகஸ்தியர், அருணகிரிநாதர், உற்சவ மூர்த்திகள் ஆகியோரின் திருவுருவங்களை மஹா மண்டபத்தில் தரிசிக்கலாம். தெய்வயானை உடனாய முருகன் 'சேனாபதி' எனும் பெயருடன் இருக்கின்றார். உள் மண்டபத்திலுள்ள முருகன் தெய்வயானையோடு தனித்து நிற்கின்றார். வலது கரங்கள் கீழ் நோக்கி வளைந்தும், இடது கரங்கள் நீட்டியும், நடராஜரைப் போல தோற்றமளிக்கின்றார். அழகான திருமேனி. 'பாகுலேய மூர்த்தி' என்பார்கள். பிரகார வலச்சுற்றில் வள்ளி - தெய்வயானை உடனாய ஆறுமுகன் தரிசனம் தருகின்றார். மேல் பிரகாரத்தில் மயில் வாகனத்துடன் காணப்படும் தண்டபாணியின் சிற்பம் அழகாக உள்ளது. கட்டுமலை மீது எழுப்பப்பட்ட மாடக் கோவில்களில் ஒன்று.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.