அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோவில், இன்னம்பர்

God Name : எழுத்தறிநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

துர்வாசரின் சாபம் காரணமாகக் காட்டானையாகத் திரிந்த ஐராவதம், இத்தலம் வந்து ஐராவத தீர்த்தத்தை உண்டாக்கி, இவ்விறைவனை வழிபட்டுச் சாபம் நீங்கப் பெற்றது. சூரியன் ஆற்றல் பெற வேண்டி இவ்விறைவனை வழிபட்டுப் பேறு பெற்றான். இனன் நம்பு ஊர் என்பதே இன்னம்பர் என்றாயிற்று. (இனன் என்றால் சூரியன்). சிவபெருமானின் ஆக்ஞைக்கிணங்க தென்னகம் வந்த அகத்தியர், இத்தலம் வந்தபோது அவருக்குத் தமிழ் இலக்கணத்தை இறைவன் உபதேசம் செய்தார். இதனால் எழுத்தறிநாதர் (அட்சரபுரீஸ்வரர்) எனப்படுகிறார். ஆலய நிர்வாகத்தைக் கவனித்து வந்த சுதன்மன் ஒரு சிவ பக்தன். இறைத்தொண்டு செய்வதிலும், திருப்பணி செய்வதிலும் முழு நேரத்தைச் செலவிட்டு வந்தான். ஆலயத்திற்கு வரவாக வந்த பணங்களை எல்லாம் இறைவனுக்கே செலவிட்டு வந்தான். கணக்கு வழக்கு ஏதும் எழுதி வைக்கவில்லை. வரவு-செலவு கணக்கு பேரேடுகளுடன் தன்னை வந்து பார்க்க வேண்டும் என அரசன் திடீரென உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, செய்வதறியாது குழம்பிப் போன சுதன்மன், இறைவன் முன் நின்று காப்பாற்றும்படி அழுதான். அப்படியே மயங்கியும் விழுந்துவிட்டான். உதவிக் கணக்கர் வேஷத்தில் சண்டேஸ்வரரை மாற்றி, அவரையும் அழைத்துக்கொண்டு, சுதன்மன் வடிவில், அரசனிடம் சென்ற சிவபெருமான், கணக்கு சம்பந்தப்பட்ட பேரேடுகளை அரசனிடம் காண்பித்துச் சான்றிதழும் பெற்றுவிட்டார். போதாதற்கு, மற்ற ஆலயக் கணக்கர்களை சுதன்மனிடம் சென்று கணக்கைக் கற்றுக்கொள்ளச் சொன்னான் அரசன். மயங்கிக் கிடந்த சுதன்மனுக்கு விஷயம் பின்னர் தெரிய வந்தது. இப்படி பக்தனுக்காகக் கணக்கன் வேஷத்தில் வந்த இறைவன் எழுந்தருளியுள்ள ஆலயம் இது. குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் செய்ய இங்கு வருகின்றனர். மேலும், சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி ஆகிய ஹோமங்கள் இங்கு செய்வது விசேஷம் என்கின்றனர். தேவாரத் திருத்தலம்.
மூலவர்: எழுத்தறிநாதர் எனப்படும் அட்சரபுரீஸ்வரர். அம்பாள்: (இரண்டு) சுகந்த குந்தளாம்பிகை, நித்ய கல்யாணி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுத்தறிநாதர் எழுந்தருளியுள்ளார். அட்சரபுரீஸ்வரர் என்று வடமொழியில் அழைக்கப்படுகிறார். தான்தோன்றீஸ்வரர் என்றொரு பெயரும் உண்டு. பெரிய ஆவுடையாரும் பெரிய பாணமும் கொண்ட மிகப்ப பெரிய திருமேனியுடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் அமர்ந்துள்ளார். பங்குனி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. சுவாமியின் கருவறை விமானம் கஜப்பிருஷ்ட அமைப்பைக் கொண்டது. சிருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), சம்ஹாரம் (அழித்தல்), திரோபவம் (மறைத்தல்), அனுக்ரஹம் (அருளல்) ஆகிய ஐந்தையும் குறிக்கும் வகையில் ஐந்து கலசங்கள் விமானத்தில் உள்ளன. சுவாமியை வழிபட சூரியன் வருவதால் மறைக்காமல் இருக்கும் பொருட்டு, மண்டபம் ஏதுமின்றி, தரையில் அமர்ந்த நந்தி வித்தியாசமாக உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களும், பிரகார வலச்சுற்றில் உள்ள மூர்த்தங்களும் அழகாக இருக்கின்றன. தட்சிண கயிலாய லிங்கம், விசாலாட்சி உடனாய விஸ்வநாதர், ஜேஷ்டாதேவி, விஷ்ணு துர்க்கை ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். பிரதான அம்பாளான சுகந்த குந்தளாம்பிகை, தவம் புரியும் கோலத்தில், வெளிப் பிரகாரத்திலுள்ள தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். சதுர் புஜங்களுடன் கூடிய அழகான திருமேனியுடன் காட்சி தருகிறாள். மின்கொம்பனையாள், கொந்தார் பூங்குழல் அம்மை ஆகிய திருநாமங்களும் உண்டு. நித்ய கல்யாணி எனப் போற்றப்படும் மற்றொரு அம்பாள், கல்யாண கோலத்தில், உட்பிரகாரத்தில் தனி சந்நிதி கொண்டுள்ளார். மங்களகரமான தோற்றத்தில் தரிசனம் தருகிறாள். பெரியவர் என்று இவ்வூர் மக்கள் அழைக்கும் நடராஜப் பெருமான், வித்தியாசமான எழில் கோலம் கொண்டவர். விரிந்த ஜடாமுடியின் இடது பக்கம் கங்கா தேவி காட்சி தருகிறாள். உச்சி கொண்டை விரிந்து ஏழு பிரிவுகளாக உள்ளது. மேற்கரங்களில் உடுக்கையும், அக்னியும் ஏந்தியுள்ளார். கீழ் வலது கரம் அபய ஹஸ்தமாக உள்ளது. இதில் நாகம் சுற்றிக்கொண்டுள்ளது. கீழ் இடது கரம் டோல ஹஸ்தமாக, தூக்கிய திருவடியின் பாத சிலம்பிற்கு நேராக உள்ளது. வலது முழந்தாளுக்கு மேலே சற்று முன்னோக்கி இடது பாதம் உள்ளது. வலது பாதம் முயலகனை மிதித்தபடி இருக்கிறது. முயலகனின் வலக்கையில் சீறும் நாகம் காணப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.