அருள்மிகு அடியார் கோவில் எனப் போற்றப்படும் ஸ்ரீ ரங்கநாதர் கோவில் (திருமண்டங்குடி)

God Name : ஸ்ரீ ரங்கநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

திருமண்டங்குடியில் வசித்த ஒரு வைஷ்ணவக் குடும்பத்தில், பூர்வ சிகை வம்சத்தில், வனமாலியின் அம்சமாக அவதரித்து, விப்ரநாராயணன் எனப் பெயர் கொண்டு வளர்ந்து, சகல சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்று, பெருமாளின் மீது தீராத பக்தி கொண்டு, தான் என்ன செய்ய வேண்டுமென பெருமாளிடமே கேட்டு, குறிப்பைப் பெற்ற வைஷ்ணவர் அவதரித்த ஸ்தலம் இது. இளமையிலேயே ஸ்ரீரங்கம் சென்று நந்தவனம் ஒன்றை அமைத்து துளசி - பூக்கள் இவற்றைக் கொண்டு திருமாலைக் கட்டி, அரங்கனுக்கு கைங்கர்யம் செய்து வந்தார். பெருமாளுக்குத் தொண்டு செய்து வந்ததாலும், எம்பெருமான் ஆணைப்படி ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்ரீ பாததீர்த்தம் சாதிக்கப் பெற்றதாலும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் எனும் திருநாமம் கொண்டார். இந்த ஆழ்வாரின் விசேஷம் - ஸ்ரீ ரங்கநாதர் ஒருவரே தன் தெய்வம் என்று வேறோர் பதியை நாடாமல் கடைசி வரை வாழ்ந்தவர். திருப்பள்ளி எழுச்சி - 10 பாசுரங்கள், திருமாலை - 45 பாசுரங்கள் ஆகிய பிரபந்தப் பாடல்களை மங்களாசாஸனம் செய்தார். கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கும் சமயத்தில் இந்தப் பாடல்களைப் பாடுவார்கள். இவர் பாடிய திருப்பள்ளி எழுச்சிக்கு, பள்ளிக் கொண்டிருந்த எம்பெருமான் திருமண்டங்குடியில் எழுந்து நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ ரங்கநாதர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சங்கு - சக்கரம் ஏந்திய மேற்கரங்களுடனும், கீழ் வலது கரம் அபய ஹஸ்தமாகவும், கீழ் இடது கரம் இடுப்பில் வைத்தும் காட்சி தருகின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். உற்சவர் அழகிய மணவாளனின் திருவுருவம் பேரழகுடன் காணப்படுகிறது. மூலவரைப் போலவே சதுர்புஜதாரியான திருமேனி. உற்சவத் தாயார்களாக ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் காட்சி தருகின்றனர். கல்யாணக் கோலம். சந்தான கோபாலனின் உற்சவ மூர்த்தியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். தனிக் கோவில் நாச்சியாராக ஸ்ரீ ரங்கநாயகித் தாயார் வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். சதுர்புஜங்கள் கொண்ட அழகிய திருமேனி. உற்சவராகவும் ரங்கநாயகித் தாயார் சேவை சாதிக்கின்றார். இத்தலத்தில் ஸ்ரீ ரங்கநாதர், வேறு எங்கும் காண முடியாத கோலமாக, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிப்பது விசேஷம். தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளி எழுச்சியைக் கேட்டு, எழுந்து நின்று சேவை சாதிப்பதாக ஐதீகம். விப்ரநாராயணர் என்ற பூர்வாஸ்ரமப் பெயரைக் கொண்ட தொண்டரடிப்பொடி ஆழ்வார் - மூலவராகவும், உற்சவராகவும் சேவார்த்திகளுக்கு தரிசனம் தரும் சந்நிதியில், திருவேங்கடமுடையானும் திருமாலிருஞ்சோலை கள்ளழகரும் மூலவர்களாக சேவை சாதிப்பது கூடுதல் விசேஷம். பெரிய திருவடி, சிறிய திருவடி, ஸ்ரீ ராமாநுஜர், மணவாள மாமுனி ஆகிய மூல விக்ரஹங்களையும் சேவிக்கலாம். உற்சவ மூர்த்திகள் அழகாக இருக்கின்றனர். சஞ்சீவி ஆஞ்சநேயர் தனி சந்நிதி கொண்டுள்ளார். இது ஒரு அபிமான ஸ்தலம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.