இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர், அகஸ்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இப்பெயர் பெற்றார். அபிஷேகம் செய்ய தீர்த்தம் இல்லாததால், அகஸ்தியர் கங்கா தேவியை வேண்ட, அவரது வேண்டுகோளுக்கிணங்க காசியிலிருந்து கங்கை, வடுக பைரவருடன் இங்கு வந்ததாக அர்ச்சகர் தெரிவிக்கின்றார். இதனால் இத்தலம் காசிக்கு சமமான புண்ணிய க்ஷேத்திரமாகப் போற்றப்படுகிறது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் 'அகத்தீஸ்வரர்'. சதுர பீடம். 'அகஸ்தியர்' பிரதிஷ்டை செய்ததால் அகத்தீஸ்வரர் என்று பெயர் பெற்றார். அம்பாள் 'பார்வதி' அழகே உருவாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
கோஷ்ட தெய்வங்களுள் தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் அழகாகக் காட்சியளிக்கிறது.
இங்குள்ள 'பைரவர்க்கு' புணுகு சாத்தி, அலங்கரித்து, சிகப்பு மலர்களால் அர்ச்சித்து, மிளகு தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். பைரவ மூர்த்தி இங்கு அநுக்ரஹ மூர்த்தியாகவும் இருப்பதால், இத்தலம் காசிக்கு சமமான புண்ணிய க்ஷேத்திரம் என்பர்.
'கங்கா தேவியும்', 'பார்வதி தேவியும்' உற்சவ விக்ரஹங்களாக உள்ளனர்.
அபிஷேகம் செய்ய தீர்த்தம் இல்லாததால், அகஸ்தியர் கங்கா தேவியை வேண்டினார். அவரது வேண்டுகோளுக்கிணங்க காசியிலிருந்து கங்கை, வடுக பைரவருடன் இங்கு வந்ததாக அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.