அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் (மெய்யூர்)

God Name : ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

வைணவ பக்தர் ஒருவர், பாலாற்றில் குளிக்கும்போது, ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து பஞ்சலோக விக்ரகங்கள் கிடைத்தனவாம். கிடைத்த உற்சவர்களின் வடிவங்களை முன்மாதிரியாக வைத்துக் கொண்டு மூல விக்ரஹங்களை தயார் செய்து பிரதிஷ்டை செய்ததாக பட்டாச்சார்யர் தெரிவித்தார்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். சுந்தரவல்லித் தாயார் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் பெருமாளுக்கு வலப்பக்கமாக தனி சந்நிதி கொண்டுள்ளார். உற்சவ பெருமாள் சுந்தரராஜரும் உற்சவத் தாயார் சுந்தரவல்லியும் அழகான பஞ்சலோக விக்ரஹங்களாக தரிசனம் தருகின்றனர். பெரிய திருவடி, சிறிய திருவடி, ஆழ்வாராதிகள் என அநேக மூர்த்தங்களை சேவிக்கலாம். ருக்மணி- சத்யபாமா சஹிதமாக காணப்படும் காளிங்கநர்தன கிருஷ்ணனின் விக்ரஹம் எழில் வாய்ந்தது. சுந்தரராஜப் பெருமாளின் கல்யாண உற்சவக் காட்சி காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.