அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோவில் (திருப்புள்ளம்பூதங்குடி)
God Name : மூலவர்: வல்வில் ராமன்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
ஜடாயுவிற்கு மோட்சம் அளித்தபின், சிரம பரிகாரம் செய்யும் நிலையில் ஸ்ரீ ராமர் இங்கு சயனித்திருப்பதாக ஐதீகம்.
ஜடாயுவிற்கு இறுதிக்கடன் செய்த ராமர், சீதாதேவி பக்கத்தில் இல்லையே என வருந்தியதால் உதவ வந்தாள் பூமா தேவி. புள் என்றால் பறவை (ஜடாயு). அதன் பூத உடலுக்கு இறுதிக்கடன் செய்ததால் இவ்வுரை புள்ளம்பூதங்குடி என அழைக்கின்றனர்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - சப்த ராம க்ஷேத்ரங்களுள் ஒன்று.
மூலவர்: வல்வில் ராமன், தாயார்: ஹேமாம்புஜவல்லி.
மூலஸ்தானத்தில் வல்வில் ராமன் புஜங்க சயனமாக, சயனக் கோலத்தில் சேவை சாதிக்கின்றார். கிழக்கே திருமுக மண்டலம் கொண்டுள்ளார். 12 அடி நீளம் கொண்ட அழகிய ஆஜானுபாகு திருமேனி. சதுர்புஜங்களுடன் கூடிய சங்கு - சக்கரதாரி. பக்கத்தில் பூமி பிராட்டி மட்டுமே அமர்ந்துள்ளார். உற்சவ ராமர் அழகே உருவாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.
தாயார் ஹேமாம்புஜவல்லி எனப்படும் பொற்றாமரையாள் தனி சந்நிதி கொண்டுள்ளார். திருக்குளத்து தாமரைப் பூவிலிருந்து தோன்றியவள் என்பதால் பொற்றாமரையாள் என்ற திருநாமம் கொண்டாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.