அருள்மிகு விஜயநாதர் திருக்கோவில் (திருவிஜயமங்கை - விசங்கி)

God Name : விஜயநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

மகாபாரதப் போரில் கௌரவர்களை வெற்றி பெறுவதற்காக, சிவபெருமானிடமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்று வரும்படி வேத வியாசர் கூறிய யோசனையின்பேரில், விஜயனாகிய அர்ச்சுணன் இத்தலத்தில் தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெற்றான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. தேவார காலத்தில் விஜயமங்கை என்றழைக்கப்பட்ட இவ்வூர் தற்போது விசங்கி என்றழைக்கப்படுகிறது. யமனை சம்ஹாரம் செய்த நிகழ்வை குறிப்பிட்டு திருநாவுக்கரசர் பாடியிருப்பதனால், ஆயுள் விருத்திக்கு வழிபட உகந்த ஸ்தலம் எனக் கூறப்படுகிறது. தேவாரத் திருத்தலம்.
மூலவர்: விஜயநாதர், அம்பாள்: மங்கை நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் விஜயநாதர். கங்காஜடேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. அர்ச்சுணனின் அம்பு பட்ட தழும்பு சிவலிங்கத் திருமேனியில் காணப்படுகிறது. கிழக்கு பார்த்த சந்நிதி. மங்கைநாயகி எனப்படும் மங்களாம்பிகை உடன் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். அட்சர மாலை, நீலோத்பல மலர், அபய-வரத ஹஸ்தங்கள் கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. தெற்கு நோக்கிய சந்நிதி. விசாலாட்சி சமேத விஸ்வநாதர், தட்சிணாமூர்த்தி, நடராஜர், அனுக்ஞை விநாயகர், கால பைரவர், சூரியன், நால்வர், சுப்ரமண்யர் ஆகிய மூர்த்தங்களை வலச்சுற்றில் தரிசிக்கலாம். அனுக்ஞை விநாயகர் திருவுருவம் அழகாக இருக்கிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.