அருள்மிகு மச்சபுரீஸ்வரர் திருக்கோவில் (சேலூர்)
God Name : மத்ஸபுரீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சக்கரவர்த்தியின் கமண்டலத்திற்குள் மீன் ஒன்று புகுந்தது. அதை அரண்மனைக்கு எடுத்துச் செல்லும்போது வளர ஆரம்பித்தது கண்டு பயந்து கிணற்றில் விட்டார். அங்கும் வளர ஆரம்பிக்கவே எடுத்து குளத்தில் விட்டார். குளத்திலும் வளரத் தொடங்கியது. பின்னர் கேட்ட அசரீரி வாக்குப்படி ஒரு கட்டுமரம் அமைத்து அதில் அனைத்து ஜீவராசிகளையும், இந்த மீனையும் அதில் விட்டு விட்டார். நிகழப்போகும் பிரளயத்தில் இந்த கட்டுமரத்திலுள்ள ஜீவராசிகள் மீண்டும் பூமியில் விளங்க வழி செய்யும் என அசரீரி மேலும் கூறியது. இந்த புராண வரலாறு நிகழ்விற்கு காரணமான மச்சாவதார மஹாவிஷ்ணுவும் வழிபட்ட மச்சபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ள ஸ்தலம்.
அந்நாளில் தேவராயன்பேட்டை என்றிருந்து இப்போது மட்டியான்திடல் எனப்படுகிற ஊர் மற்றும் சேலூர் இரண்டும் சேர்ந்து ஒரே வைப்புத் தலமாகக் கருதப்படுகிறது.
மூலவர்: மத்ஸபுரீஸ்வரர்் அம்பாள்: சுகந்த குந்தளாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மத்ஸபுரீஸ்வரர். மத்ஸ அவதாரம் எடுத்த திருமால் வழிபட்ட இறைவன் என்பதால் இப்பெயரைக் கொண்டார். சுகந்த குந்தளாம்பிகை அம்பாள் உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
சேல் என்பது கெண்டை மீன் வகையைக் குறிக்கும். மச்சாவதாரத்தில் மீன் வழிபட்டதால் இத்தலம் சேலூர் என்ற பெயரைக் கொண்டது. கல்வெட்டுக்களில் திருச்சேயலூர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட 9ஆம் நூற்றாண்டுக் கோவில்.
கோவிலின் முன் மண்டபத்திலும், அதன் விமானத்திலும் ஸ்தல வரலாற்றை சிற்பங்களாக சித்தரித்துள்ளனர். வரிசையாக யானைகள், பூதகணங்கள், நர்த்தன கணபதி, முருகன், சப்த மாதர்கள், வீரபத்ரர், ஜேஷ்டா தேவி, ஆதித்ய கரிகாலன் வழிபட்ட பிள்ளையார் என அனைத்து சிற்பங்களும் கலை அம்சத்துடன் அற்புதமானவைகளாகப் படைக்கப்பட்டுள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.