அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் (தென்குடித்திட்டை)

God Name : ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

திட்டை என்றால் மேட்டிடம் எனப் பொருள்படும். ஆதி கல்பத்தில் தோன்றிய 28 ஸ்தலங்களுள், பிரளய வெள்ளத்தால் அழிந்து போன 26 ஸ்தலங்கள் போக மிஞ்சியது இரண்டே ஸ்தலம். அவற்றுள் ஒன்று தோணித்திட்டை எனப்பட்ட சீர்காழி, இது வடகுடி திட்டை என அறியப்பட்டது. இரண்டாவது தென்குடித்திட்டை எனப்படும் இந்த ஸ்தலம். வெண்ணாறு - வெட்டாறு எனும் இரு நதிகளின் இடையில் இருப்பதாலும் திட்டை எனப்படுகிறது. நான்கு வேதங்களும் தனித்தனியே வந்து முறையிட்டு வழிபட்டு தத்தம் குறைகளை தீர்த்துக் கொண்ட ஸ்தலம் திட்டை. இத்தலத்தில் ஸ்வாமி, அம்பாள், பிள்ளையார், முருகன் என அனைவருமே அற்புதங்களை நிகழ்த்தியவர்கள். தங்களிடம் ஓரவஞ்சனையாக நடந்து கொண்ட சிற்றன்னையை அச்சுறுத்த காலைத் தூக்கிய யமனை, 'உனது கால் துண்டுபட்டு கீழே விழட்டும்' என சபித்தாள் சிற்றன்னை. தந்தையின் யோசனைப்படி யமன் இங்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்று தென் திசைக்கு தலைவன் ஆனான். இங்கு கடுந்தவம் மேற்கொண்டு இவ்விறைவனை வழிபட்ட சனீஸ்வரன் கிரஹநாதன் பட்டம் பெற்றார். சுமாலி எனும் சிவபக்தனைக் கொன்ற தோஷத்திற்கு ஆளான சூரியனும் இங்கு தவம் புரிந்து தோஷம் நீங்கப் பெற்றார். மனு பிரஜாபதி புத்திரன் வேண்டி யாகம் செய்தார். பெண் குழந்தையே பிறந்தது. மனுவை அழைத்துக் கொண்டு இத்தலம் வந்த வசிஷ்டர் ஸ்வயம்புதேஸ்வரரை மனமுருக வேண்டி வழிபட்டார். மனுவின் பெண் குழந்தை இலாவை இவ்விறைவன் அருள் புரிந்து ஆண் மகனாக மாற்றினார். இதனால் ஸ்வாமிக்கு வசிஷ்டேஸ்வரர் என்ற பெயரும் வந்தது. அஸ்வினி தேவர்கள், கார்த்த வீர்யார்ஜீணன், காமதேனுவின் புத்திரிகளான நந்தினி - கமலினி பசுக்கள், ஜமதக்னி முனிவர், பரசுராமர், ஆதிசேஷன், ராஹுவின் மகன் சுமாலி, திருமால், பிரம்மன், பைரவர் ஆகியோர் இவ்விறைவனின் அருளால் நற்பலன்கள் பெற்றுள்ளனர். சுகந்த குந்தளா, மங்களா ஆகிய பெண்கள் அம்பாளின் அனுகிரகத்தால் நற்பலன்கள் அடைந்தவர்கள். தேவேந்திரன் புஷ்டி கணபதியின் அருளால் அகஸ்தியரின் குடத்திலிருந்து காவிரியை வெளிக் கொணர்ந்தான். சிந்தூர கணபதி பிரம்மனுக்கும், சுதா கணேசர் விஷ்ணுவிற்கும் அனுகிரகம் செய்துள்ளனர். ஞானபரமூர்த்தியாக விளங்கும் முருகனே இத்தலம் தென்குடித்திட்டை எனப் பெயர் பெறக் காரணமானவன் என்பர். தேவர்களுக்கு குருவான ப்ரஹஸ்பதி மேலும் உயர்ந்த பதவிகள் பெற வேண்டி, இத்தலம் வந்து கடுந் தவம் மேற்கொண்டார். ப்ரஹஸ்பதியின் தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து, நவகிரகங்களில் ஒருவராகும் தகுதியையும் தந்து ஆசிர்வதித்தார். அப்படி பதவி உயர்வு பெற்ற இந்த ஸ்தலத்திலேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். சப்த ரிஷிகளுள் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் புதல்வனான குரு எனப்படும் ப்ரஹஸ்பதியின் பார்வை சிறப்பானது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள். பிரம்மணஸ்பதி என்றொரு பெயரும் இவருக்கு உண்டு. வியாழ பகவான் என்றும் கூறுவர். தேவாரத்திருத்தலம் - பஞ்சபூத க்ஷேத்ரங்களுள் ஒன்று.
மூலவர்: ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர். குட்டையான லிங்க பாணமும், சதுர ஆவுடையாரும் கொண்ட அழகான திருமேனி. ஒளி வீசும் தேஜோ மய லிங்கம். சுயம்பு லிங்க வடிவம். மூலவர் சுயம்புவாக தோன்றியதால் சுயம்புதேஸ்வரர் எனப்படும் தான்தோன்றி நாதர் எனவும், காமதேனு பூஜித்ததால் தேனுபுரீஸ்வரர் எனப்படும் பசுபதீஸ்வரர் எனவும், வசிஷ்டர் பூஜித்து வழிபட்டதால் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் எனவும், பிரளய காலத்திலும் நின்றதால் அனந்தேஸ்வரர் எனவும், ஸ்ரீ தட்சிண குடித்வீப க்ஷேத்ரேஸ்வரர் எனவும் போற்றப்படுகின்றார். மூலஸ்தானத்து கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் சந்திரகாந்தக்கல் வழியாக தண்ணீர் தாரைகளாக சொட்டி ஸ்ரீவசிஷ்டேஸ்வரருக்கு நித்யாபிஷேகம் செய்கிறான் சந்திரன். சந்திரனின் குளிர்ந்த கிரணங்களைப் பெற்று அதை நீராக மாற்றி 24 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு சொட்டு என்ற கணக்கில், ஸ்வாமி மீது வீழ்ந்து அபிஷேகம் செய்விக்கின்றது இந்த சந்திரகாந்தக்கல். பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலான உத்தராயணத்திலும், ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலான தட்சிணாயத்திலும் சூரியனின் கிரணங்கள் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. மூலவரின் கோஷ்டத்தில் ஸ்ரீ நர்த்தன கணபதி, லிங்கோத்பவர், பிரம்மா, மற்றும் துர்க்கை என அனேக மூர்த்தங்களை தரிசிக்கலாம். மூலவரை நடுவில் கொண்டு, உட்பிரகாரத்து நான்கு மூலைகளிலும் நான்கு சிவலிங்கங்கள் இருப்பது பஞ்சலிங்க க்ஷேத்ரம் எனவும், இவ்வாறு இருந்தால் இத்தலம் பஞ்சபூத க்ஷேத்ரத்திற்கு சமம் என்றும் அர்ச்சகர் தெரிவிக்கின்றார். மூலஸ்தான வாசலில் துவார கணபதி, துவார சுப்ரமண்யர் தரிசித்து ஆசி பெற்று, வலச்சுற்றில் சித்தி விநாயகர், வள்ளி - தெய்வயானை உடனாய பாலசுப்ரமண்யர், காளி தேவியின் மகாமேரு ஸ்வரூபம், மஹாலிங்கம், சூரியன் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். இந்திரன் வழிபட்ட விநாயகரான ஆபத்ஹரகணேசர், அகஸ்தியரின் கமண்டலத்திலிருந்து காவிரியை வெளிக் கொணர்ந்த புஷ்டி கணபதி, சுதா கணேசர், மற்றும் சிந்தூரக் கணபதி ஆகிய பிள்ளையார் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றனர். அம்பாள் ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை அழகே உருவாக நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். பிரளய வேகத்தைக் குறைத்து உலக சுழற்சிக்கு வழி வகுத்தாள் என்பதால் உலக நாயகி என்ற பெயர் கொண்டாள். மங்களேஸ்வரி என்ற பெயரும் உண்டு. தெற்கு பார்த்த சந்நிதி. எதிரே செப்பில் உருவான நந்தியைக் காணலாம். மேற்கூரையில் பன்னிரெண்டு ராசிகளையும் சிற்பங்களாக வடித்துள்ளனர். அம்பாள் சந்நிதியின் மேற்கே, ஸ்வாமி -அம்பாள் சந்நிதிகளுக்கு இடையே, ப்ரஹஸ்பதி தனி சந்நிதி கொண்டுள்ளார். மேற்கரங்களில் நாகம், அக்னி ஆகியன ஏந்தி, இடது கீழ்க்கரத்தில் புத்தகம் கொண்டும் வலது கீழ்க்கரத்தில் சின்முத்திரை கொண்டும், சதுர்புஜங்களுடனான அழகிய திருமேனி. நின்ற திருக்கோலம். தெற்கு பார்த்த சந்நிதி. இத்தலத்தின் சிறப்பு மூர்த்தமே பிரஹஸ்பதிதான். மற்ற குரு ஸ்தலங்களில் அதிதேவதையான தட்சிணாமூர்த்தியே குரு ஸ்தானத்தில் இருப்பார். இங்கு மட்டுமே ப்ரஹஸ்பதி எழுந்தருளி அருள் புரிகின்றார். இவருடைய உற்சவ மூர்த்தம் மிக அழகானது. விழாக் காலங்களில் வீதிவுலா வருகின்றார். கோபுர கலசங்கள், கொடுமரம் உட்பட அனைத்தும் முழுக்க முழுக்க கருங்கற்களால் உருவான கோவில்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.