அருள்மிகு ஜெகத்ரட்சகப் பெருமாள் திருக்கோவில் (திருக்கூடலூர்)

God Name : மூலவர்: வையங்காத்தப் பெருமாள், உற்சவர்: ஜகத்ரட்சகன்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

தேவர்களும், நந்தக முனிவரும் ஒன்று கூடி வழிபட்ட ஸ்தலம் என்பதால் திருக்கூடல் எனப் பெயர் பெற்றது. விஷ்ணு பக்தனான அம்பரீஷன், விஷ்ணு பூஜையில் லயித்திருந்தபோது துர்வாச முனிவர் வந்ததை கவனிக்கத் தவறிவிட்டான். இதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர் அம்பரீஷனை சபிக்க முற்பட்டார். விஷ்ணுவிடம் சரணாகதி அடைகிறான் அம்பரீஷன். விஷ்ணு சக்கரம் துர்வாசரைத் துரத்த ஆரம்பித்தது. பின்னர் முனிவர் தன் தவறை உணர்ந்து, பிழை பொறுத்தருள வேண்டுகிறார். பெருமாளும் மன்னிக்கிறார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ஐந்து உற்சவ திருமேனிகளை வைத்து பஞ்சபேர விதானம் என்ற விதிப்படி நித்ய வழிபாடுகளை நடத்தி வருகின்றனர். இத்தலத்திலுள்ள விருட்சமான பலா மரம் 300 வருடங்கள் பழமையானது. இதில் சங்கு போன்ற வடிவம் இயற்கையாகவே தோன்றியுள்ளது. 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலவர்: வையங்காத்தப் பெருமாள், உற்சவர்: ஜகத்ரட்சகன், தாயார்: பத்மாசினி. மூலஸ்தானத்தில் வையங்காத்தப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஐந்தடி உயரம் கொண்ட அழகான திருவுருவம். உற்சவ மூர்த்தியான ஜகத்ரட்சகனின் திருவுருவம் பேரெழில் கொண்டது. அம்பரீஷன், காவிரி, நந்தக முனிவர் ஆகியோர்க்கு பிரத்யட்சமானதாக ஐதீகம். காவிரிக்கு இளமையைத் தந்தவர். இவருக்கு ஜெகத்ரட்சகன், உய்யவந்தார் ஆகிய திருநாமங்களும் உண்டு. தாயார் பத்மாசினி வரப்பிரசாதியாக எழுந்தருளியுள்ளார். புஷ்பவல்லி என்ற பெயரும் உண்டு. பிரகாரத்தில் வரதராஜப் பெருமாள், ஆண்டாள், ஆழ்வாராதிகள் ஆகியோரை சேவிக்கலாம். ஆனந்தக் கூத்தாடும் ஆஞ்சநேயரின் திருவுருவம் அற்புதமாக இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.