அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் (திங்களூர்)

God Name : கைலாசநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

தட்சன் தன்னுடைய 27 பெண்களை சந்திரனுக்கு மணமுடித்து வைக்கின்றார். (அஸ்வினி முதல் ரேவதி வரை). அவர்களுள் ரோஹிணியிடம் மட்டுமே சந்திரன் பிரியமாக இருந்தான். மற்ற பெண்கள் தந்தையிடம் சென்று முறையிட்டதால் சந்திரனை சபிக்கின்றார் தட்சன். சாபத்தால் ஒளியிழந்து தேயலானான் சந்திரன். இத்தலத்திற்கு வந்து இவ்விறைவனை வழிபட்டு தன் சாபத்தை போக்கிக் கொண்டான் சந்திரன் என ஸ்தல வரலாறு கூறுகிறது. திங்கள் எனப்படும் சந்திரன் இவ்விறைவனை வழிபட்ட ஊர் என்பதால் திங்களூர் எனப் பெயர் கொண்டது. பிறையை சூடிய இறைவன் என்பதால் திங்களூர் என்ற பெயர் வந்தது. திருநாவுக்கரசரின் சிவபக்தி - சிவத்தொண்டு ஆகியவற்றை கேள்விப்பட்டு, இவ்வூரைச் சேர்ந்த அப்பூதி அடிகள் என்பவர் அவர் பெயரில் மடம், சத்திரம், தண்ணீர்பந்தல், குளம், வீதி, கோசாலை ஆகியவற்றை ஏற்படுத்தினார். தாம் காணும் காட்சி எல்லாம் திருநாவுக்கரசரே என எண்ணினார் அப்பூதி அடிகள். அவ்வளவு பக்தி. அப்பூதி அடிகளார் திருநாவுக்கரசரை பார்த்தது கூட கிடையாது. அப்பூதி அடிகள் தமது மகனுக்கு திருநாவுக்கரசரின் பெயரையே சூட்டினார். க்ஷேத்ராடனம் மேற்கொண்டிருந்த திருநாவுக்கரசர் இத்தலம் வந்தபோது, இவற்றையெல்லாம் பார்த்து விட்டு, தம் பெயரில் இவ்வளவு தர்ம ஸ்தாபனங்களை நடத்தும் பக்தனைக் காண விரும்பி அவரது இல்லத்திற்கு சென்றார். அப்பூதி அடிகளை சந்தித்ததும் முதல் கேள்வியாக, "இவற்றிற்கெல்லாம் தங்களது பெயரை வைக்காமல் யாரோ முன்பின் தெரியாத திருநாவுக்கரசர் பெயரை ஏன் வைத்தீர்கள்?" என்று கேட்டார். சைவத்திற்கே பெருமை தேடித் தரும் மஹானை தாழ்த்திப் பேசியதை அப்பூதி அடிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. "நீங்கள் யார்?" எனக் கேட்டார். "நீவிர் புகழ்ந்து பேசும் திருநாவுக்கரசர் நான்தான்" என்று பெரியவர் கூறியதும் உணர்ச்சி வசப்பட்ட அப்பூதி அடிகள் ஆனந்தம் கொண்டார். அவரை அமுதுண்ண அழைத்தார். துணைவியாரை சமையல் செய்யச் சொல்லி விட்டு, மூத்த மகன் திருநாவுக்கரசை வாழை இலை பறித்து வருமாறு பணித்தார். தோட்டத்தில் இலை பறிக்கச் சென்றவனை பாம்பு தீண்டி விட்டது. மகனின் மரணச் செய்தி, பெரியவர் உணவருந்துவதை தடுத்து விடும், விருந்தோம்பலுக்கு பங்கம் வந்துவிடும் என நினைத்த அப்பூதி அடிகளும் அவரது துணைவியாரும், மகன் மறைந்ததை மஹானிடம் மறைக்கின்றனர். அமுதுண்ண அமர்ந்த பெரியவர், எல்லோருக்கும் திருநீறு வழங்கி விட்டு, "என் பெயர் கொண்ட உங்கள் மகனை கூப்பிடுங்கள்" என்றார். "இப்போது இங்கு வரமாட்டான்" எனக் கூறி சமாளித்தனர் தம்பதியினர். பெரியவர் விடுவதாயில்லை. மீண்டும் வற்புறுத்தினார். நடந்ததை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் சொல்லி விட்டனர். திருநாவுக்கரசர் "ஒன்று கொலாம்" என்ற பதிகத்தைப் பாடி இறைவனின் கருணையை வேண்டினார். விடம் தீர்த்த திருப்பதிகம் பாடி முடித்ததும், சிவபெருமான் அருளால் இறந்தவன் பிழைத்து எழுந்தான். அப்பூதி அடிகளும் தனது மனைவி மற்றும் மகனோடு திருநாவுக்கரசருக்கு அமுது படைத்து மகிழ்ந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. நாயன்மார்களுள் ஒருவரான அப்பூதி அடிகள் வாழ்ந்து முக்தியடைந்த ஸ்தலம். நவகிரகங்களுள் சந்திரனுக்குரிய ஸ்தலம். வில்வம், வாழை என இரண்டு ஸ்தல விருட்சங்களைக் கொண்ட ஸ்தலம். அப்பூதி அடிகளின் மகன் வாழை இலை பறிக்கப் போன இடத்தில் பாம்பு கடித்து, இறந்து போனதும், பின்னர் திருநாவுக்கரசர் விடந்தீர்த்த பதிகம்பாடி உயிர்ப்பிக்க வைத்ததையும் நினைவு கூற வாழைமரம் ஸ்தல விருட்சமாக உள்ளது போலும். அசுவினி, மிருகசீரிஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி ஆகிய நட்சத்திர தினங்களில் சந்திர ஹோரை வேளையில் வெள்ளிக் கிண்ணத்தில் பால், தேன், நெய், சாதம் கலந்து சந்திரனையும் பசுவையும் காண்பித்து குழந்தைகளுக்கு அன்னப்ராசனம் செய்தால் ஜலதேவதை மற்றும் ஔஷத தேவதையின் அருள் குழந்தைகளுக்கு கிடைக்கும். எனவே அன்னப்ராசனத்திற்கு இத்தலம் சிறப்புற்று விளங்குகிறது. தேவார வைப்புத்தலம் - நவகிரக ஸ்தலங்களுள் - சந்திரன் ஸ்தலம்.
மூலவர்: கைலாசநாதர், அம்பாள்: பெரியநாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கைலாசநாதர். தேஜோமய லிங்கத் திருமேனியில் சந்திரனின் ஒளி பிறை சூடியது போல இருக்கும். தெற்கு பார்த்த சந்நிதியில் பெரியநாயகி அன்னை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சகல சௌந்தர்யங்களுடன் கூடிய பெரிய திருவுருவம். சூரியன், பிள்ளையார், முருகன், பைரவர், பத்மாசனத்தில் அமர்ந்த தட்சிணாமூர்த்தி, அப்பூதி அடிகளின் குடும்பம், அப்பர் பெருமான் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். சுகாசனத்தில் அமர்ந்து காட்சி தரும் தட்சிணாமூர்த்தி அற்புதமான அழகுடன் காணப்படுகிறார். சிறப்பு மூர்த்தமான சந்திரன் தென்கிழக்கு நோக்கி தனி சந்நிதி கொண்டுள்ளார். சண்டேசர் தனது தாயார் பவித்ரையுடன் தரிசனம் தருவது விசேஷமான சிறப்பாகும். சந்திரன் உட்பட அனைத்து கிரகங்களும் சூரியனைப் பார்த்தபடி இருக்கின்றன. சூரிய - சந்திர கிரணங்கள் சுவாமி மீது படர்ந்து பூஜை செய்யும் ஒரே ஸ்தலம். பங்குனி மற்றும் புரட்டாசி மாதங்களின் பௌர்ணமியிலும், அதற்கு முன்னும் பின்னும் உள்ள இரு தினங்களிலும், சந்திரனின் ஒளி சுவாமி மீது படர்ந்து சந்திர பூஜை செய்கின்றன. பங்குனி உத்திரம் காலை 6 மணிக்கு சூரிய பகவானின் கிரணங்கள் சுவாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.