அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் (திருவேதிகுடி)

God Name : வேதபுரீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

'வேதி' என்றால் பிரம்மன். பிரம்மன் வழிபட்டதால் இவ்வூர் 'வேதிகுடி' எனப் பெயர் கொண்டது. வேதங்கள் வழிபட்டதாலும் இப்பெயர் வந்ததாகக் கூறுவர். அசுரர்களால் களவாடப்பட்டதால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்க வேதங்கள் இத்தலத்தில் இவ்விறைவனை வழிபட்டன. இதன் காரணமாகவே இறைவனுக்கு 'வேதபுரீஸ்வரர்' என்ற திருநாமம் வந்தது. ஸ்வாமி வாழை மடுவில் இருந்து தோன்றியதால் 'வாழைமடு நாதர்' என்ற பெயரைக் கொண்டார். அம்பாள் மங்கையர்க்கரசியின் அருளால் அரசகுமாரிக்கு திருமணம் நடைபெற்றதால், இவ்வூர் அரசன் தன் மகளுக்கு 'மங்கையர்க்கரசி' என்ற பெயரைச் சூட்டினானாம். சப்த ஸ்தான ஸ்தலங்களுள் நான்காவது ஸ்தலம் இது. ஜாதகத்தில் 7வது இடம் - களத்ர தோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம். திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடலான "நீறுவரி" எனத் தொடங்கி, "உன்னி இரு போதும்...", "வேதிகுடியே" என முடியும் பாடலை பாராயணம் செய்தால் நல்ல பலன்கள் கிட்டும் என்பர். திருமணம் தடைப்பட்டவர்கள் ஆணோ/பெண்ணோ இவ்விறைவனை வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும். இது செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலம். தேவாரத் திருத்தலம் - சப்த ஸ்தான ஸ்தலங்களுள் ஒன்று.
மூலவர்: வேதபுரீஸ்வரர்் அம்பாள்: மங்கையர்க்கரசி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக வேதபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். பெரிய லிங்கத் திருமேனி. தேவர்கள் ஸ்தாபனம் செய்ததால் தெய்வீக லிங்கம் என்பார்கள். இவருக்கு 'வாழைமடு நாதர்' என்ற திருநாமமும் உண்டு. 'பரகேசரி சதுர்வேதி மங்கள மஹாதேவர்' எனப் போற்றுகின்றனர். பங்குனி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் மங்கையர்க்கரசி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். அபய - வரத முத்திரைகள் கொண்டு சதுர்புஜங்களுடன் கூடிய அழகிய திருமேனி. கருவறையில் தொடர்ந்து நடைபெறும் வேத முழக்கங்களை செவி சாய்த்து கேட்கும் விநாயகர் கருவறை வாசலில் உள்ளார். 'வேதம் கேட்ட விநாயகர்' என்று பெயர். காதை உயர்த்தி ஒரு புறமாக சாய்த்து உற்றுக் கேட்கும் பாவனையில் காட்சி தரும் ஜீவனுள்ள திருவுருவம். கோஷ்டத்தில் காணப்படும் அர்த்தநாரீஸ்வரர் அழகாகவும் வித்தியாசமாகவும் உள்ளார். மற்ற ஸ்தலங்களில் இடது புறமாக இடம் பெற்றிருக்கும் அம்பாள் இங்கு வலது புறமாக உள்ளார். மஹா மண்டபத்தில் நடராஜர் சபையை தரிசிக்கலாம். பிரகார வலச்சுற்றில் 108 சிவலிங்கங்கள், விநாயகர், சுப்ரமண்யர், சப்த ஸ்தானத்து ஏழு சிவலிங்கங்கள் ஆகியன தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.