அருள்மிகு பிரம்மசிர கண்டீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டியூர்
God Name : ஸ்ரீ பிரம்மசிர கண்டீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
சிவபெருமானுக்கு  ் ்தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம்  ்எனும் ஐந்து திரு முகங்கள் ்
இருப்பது போல், ப்ரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தனவாம். இதனால் ப்ரம்மன் சிவனுக்கு
நினைத்துக் கொண்டு செருக்கடைந்தார். இதைக் கண்டு வெகுண்ட பார்வதி தேவியின் வருத்தம் போக்க, ்
சிவபெருமான் - ப்ரம்மனின ஐந்தாவது தலையைப் கொய்ததாகவும் புராண வரலாறு.
ப்ரம்மனின் தலையை கண்டனம் செய்ததால் கண்டன க்ஷேத்ரம் என்றும் கண்டியு+ர் என்றும் பெயர் கொண்டது ்
இவ்வு+ர். இறைவன் ப்ரம்மசிரக்கண்டீசர் என்றானார். சிவபெருமானின் வீர பராக்ரமங்களை விளக்கும் அஷ்ட ்
வீரட்டானங்களுள் முதன்மையானது. இதன் காரணமாக வீரட்டானம் என்றும் இறைவனுக்கு வீரட்டேஸ்வரர் ்
என்றும் பெயர் வழங்கலாயிற்று.
சிவபெருமானின் பக்தரான சதாதபர் எனும் முனிவர் தினமும்  ்பிரதோஷ நேரத்தில் திருக்காளத்தி சென்று ்
காளத்திநாதரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் காளத்திக்கு போக முடியாமல் ்
கண்டியு+ரிலேயே தங்கும்படி நேரிட்டது. காளத்திநாதரை தரிசிக்க முடியாமல் போனதற்காக சதாதபர் தனது ்
உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டபோது, அங்கு ஒரு வில்வமரம் தோன்றியது. அதனடியில் காளத்தி
நாதராகவே காட்சி தந்தார் சிவபெருமான்.
ஆதிகாலத்தில் எழுந்த கல்ப சூரியன் தனது ஒளி என்றென்றும் குறையாமலிருக்க இங்கு தவம் புரிந்து ்
இவ்விறைவனை வழிபட்டு அருள் பெற்றதாக ஸ்தல வரலாறு. தட்சன் சிவபெருமானை நிந்தித்து சிவ ்
அபராதத்திற்குள்ளானான். இவ்விறைவனை வழிபட்டு நற்கதி பெற்றான் என ஸ்தல வரலாறு. ்
துரோணாச்சார்யார் இவ்விறைவனை வழிபட்டு புத்ர பாக்யம் பெற்றார். ்
சப்தஸ்தான பல்லக்கு திருவிழாவின்போது ஸ்வாமி இத்தலத்திற்கு வந்து விட்டு திரும்பி செல்லும்போது ்
புளியோதரை/தயிர்சாதம் கட்டிக் கொடுத்தனுப்புவது மரபு என ஊர் பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.
தேவாரத்திருத்தலம் - சப்த ஸ்தான ஸ்தலங்களுள் ஒன்று - அஷ்ட வீரட்டானங்களுள் ஒன்று
மூலவர்: ஸ்ரீ ப்ரம்ம சிரக் கண்டீசர் , அம்பாள்: ஸ்ரீ மங்களாம்பிகை
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார்  ்ஸ்ரீ ப்ரம்ம சிரக் கண்டீசர் . வட்ட வடிவ ஆவுடையாரும், ்
உயரமான பாணமும் கொண்ட அழகிய திருமேனி.  ்சுயம்புநாதர் . இவ்விறைவனுக்கு வீரட்டேஸ்வரர், வீரட்டநாதர், ்
ஆதி வில்வ நாதர், கண்டியு+ர் உடைய மஹாதேவர்ஆகிய திருநாமங்களும் உண்டு. மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் ்
மாலை நேரத்தில் 5.45 முதல் 6.10  ்வரை சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து  ்சூரிய பு+ஜை ்
செய்கின்றன.
ப்ரம்மன் சிரம் கொய்ததால் ப்ரம்மசிரக்கண்டீசர், வீரத் திருவிளையாடல் புரிந்ததால் வீரட்டேஸ்வரர்,  ்வில்வ வனத்தில் ்
தோன்றியதால்  ்ஆதிவில்வவனேஸ்வரர் எனப் பெயர்கள் வந்தன.
கருவறையின் பக்கத்தில் வடுக மூர்த்தியின் திருவுருவம் வீரட்டானராக எழுந்தருளி தரிசனம் தருகிறார் . சிவபெருமானின் ்
உக்ரமான கோபத்திலிருந்து உருவாகியவர் பைரவர்.
தெற்கு பார்த்த தனி சந்நிதியில் அம்பாள் மங்களாம்பிகை எழுந்தருளி நின்ற திருக் கோலத்தில்  ்தரிசனம் தருகின்றார். ்
அக்கமாலை, தாமரை மலர், அபய - வரத முத்திரைகள் கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகிய திருமேனி.
வடக்கு திருச்சுற்றில் ப்ரம்மா தரிசனம் தருகின்றார். பெரிய வடிவினர். மேற்கரங்களில் ஜபமாலையும் - புஷ்பமும் ்
கொண்டுள்ளார். கீழிரு கரங்கள் மூலவரை வணங்கிய நிலை. அழகான நான்கு முகங்கள். அருகே சரஸ்வதி தேவி ்
காட்சி தருகின்றாள். சிவபெருமானை இகழ்ந்து, உச்சந்தலையை இழந்து  ்பின்னர் நல்லுணர்வு பெற்று, தம்பதி ்
சமேதரராக இறைவனை வழிபடும் சாந்தமான தவக் கோலம்.
கோஷ்டத்தில் அமர்ந்த கோலத்தில் காணப்படும் அர்த்தநாரPஸ்வரர் வித்யாசமான அழகுடன் இருக்கின்றார்.
விநாயகர், வள்ளி - தெய்வயானை உடனாய சுப்ரமண்யர், பொற்காளியம்மன், கால பைரவர், சூரியன், சப்த (ஏழு) ்
விநாயகர்கள், பஞ்சபு+த லிங்கங்கள், சப்த ஸ்தான ஸ்தலத்து (ஏழு) சிவலிங்கங்கள் ஆகிய மூர்த்தங்களை ்
வலச்சுற்றில் தரிசிக்கலாம். சாதத முனிவரின் திருவுருவமும் அவருக்கு  ்காட்சி தந்த காளத்திநாதரும் ்
எழுந்தருளியுள்ளனர். ஸ்தல விருட்சமடியில் ராஜ கணபதியை  ்தரிசிக்கலாம். முருகப்பெருமான் ஞானகுருவாக
எழுந்தருளியுள்ளார்.
சப்த ஸ்தான ஸ்தலங்களுள் ஐந்தாவது ஸ்தலம். அஷ்ட வீரட்டானங்களுள் முதன்மையானது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.