அருள்மிகு ஸ்ரீ பட்டாபிராமர் திருக்கோவில் (புது அக்ரஹாரம்)

God Name : ஸ்ரீ பட்டாபிராமர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

தஞ்சை மராட்டிய மன்னரின் மனைவி மகாராணி மோகனாம்பாள் இக்கோவிலை ஸ்தாபித்ததாகக் கூறப்படுகிறது. ஆராதகரான ராமபத்ராச்சார்யார் தனது தள்ளாத வயதிலும் ஸ்ரீராமனுக்கு கைங்கர்யங்கள் செய்து வருகிறார். தியாகராஜர் அனுதினமும் உபாசிக்கும் ஸ்ரீ ராமர். முத்துஸ்வாமி தீட்சிதர் மாமவ பட்டாபிராம... எனும் கீர்த்தனையை மணிரங்கு ராகத்தில் பாடியுள்ளார். ராமநவமி உற்சவத்தின்போது இப்பாடல் பாடப்படுகிறது.
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் அபூர்வமான கோலம் சேவிக்க ஆனந்தம் பெருகுகிறது. ஸ்ரீ ராமனும் - சீதா தேவியும் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றனர். பட்டாபிஷேகக் கோலம். ஸ்ரீ ராமர் தனது இடது கரத்தை தொடை மீது வைத்தும் வலது கரத்தில் ஞான முத்திரை கொண்டும் காட்சி தருகிறார். திருவடிகளருகே ஸ்ரீ ஆஞ்சநேயர் தாச பாவம் கொண்டு வலது கையால் வாய் பொத்தி, இடது கை ஸ்ரீ ராமரின் திருவடியை வருட, மண்டியிட்டு அமர்ந்துள்ளார். மூல விக்ரகத்திலேயே இப்படி இருப்பது வித்தியாசமான அழகு. இடது புறமாக ஸ்ரீ சீதா தேவி வலது கரத்தில் தாமரை மலர் வைத்துக் கொண்டும் இடது கரம் ஐஸ்வர்ய தன ஹஸ்தமாக கொண்டு காட்சி தருகிறார். அருகே சத்ருக்கணன் சாமரம் வீசுகிறான். ஸ்ரீ ராமரின் வலது புறமாக காணப்படும் லக்ஷ்மணன் தனது வில்லோடு ராமரின் வில்லையும் சேர்த்து தாங்கி நிற்கின்றார். பரதன் குடை பிடித்தபடி காணப்படுகிறான். மூல விக்ரகங்களைப் போலவே உற்சவ விக்ரகங்களும் இருக்கின்றன. ஆஞ்சநேயரின் உற்சவ விக்ரகம் மட்டும் கரங்களில் ராமாயண ஓலைச்சுவடியும் ஜபமாலையும் வைத்துக் கொண்டும் வாலை தலைக்கு மேல் வளைத்து வைத்தபடியும் காணப்படுகிறது. தனியாக மற்றொரு ஆஞ்சநேயர் வலக்கையில் வீணையுடனும், இடக்கையில் புத்தகம் கொண்டும் ராமகானம் செய்யும் பாவனையில் அழகாக இருக்கின்றார். ஆழ்வார்களின் மூலவ - உற்சவ விக்ரகங்கள் அழகாக இருக்கின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.