அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோவில் (திரு ஆலம்பொழில் - வெள்ளாம்பரம்பூர்)
God Name : ஆத்மநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
அரியலூர்
Call : +91-
இவ்வாலயம், தேவாரக் காலத்தில் தென் பரம்பைக்குடியில் இருந்ததாம். இப்போது ஆலயம் உள்ள இடம் தனி ஊராக விளங்குகிறது.
சுந்தரமூர்த்தி நாயனார் இவ்விறைவனை தரிசித்துவிட்டு, இவ்வூர் மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கனவில் தோன்றிய சிவபெருமான், "மழபாடி வர மறந்தனையோ?" எனக் கேட்டு மறைந்தார். உடனே கண் விழித்துக் கொண்ட சுந்தரர், காவிரியின் அக்கரையிலுள்ள மழபாடி எனும் ஊருக்குச் சென்று, அங்குள்ள இறைவனை தரிசித்து, "பொன்னார் மேனியனே" எனும் பதிகத்தைப் பாடினார்.
தேவாரத் திருத்தலம்.
மூலவர்: ஆத்மநாதர்் அம்பாள்: ஞானாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஆத்மநாதர் எழுந்தருளியுள்ளார். சுயம்பு லிங்கம். மேற்கு பார்த்த சந்நிதி.
தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் ஞானாம்பிகை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
விநாயகர், வள்ளி - தெய்வயானை உடனாய முருகப் பெருமான், மேதா தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர்,
பஞ்ச லிங்கங்கள் ஆகியோரை தரிசிக்கலாம்.
காசிபர் மற்றும் அஷ்டவசுக்கள் வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.