அருள்மிகு மாவடியான் கோவில் (கருப்பூர்)
God Name : மாவடியான் எனப்படும் மாவடிக் கருப்பு
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் மாவடியான் எனப்படும் மாவடிக் கருப்பு எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். பெரிய வாள் மற்றும் கதையுடன் கம்பீரமாகக் காட்சி தருகின்றார். கருவறைக்கு ஒன்பது படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மாவடிக் கருப்பிற்கு வலப்புறமாக மதுரை வீரன் தெற்கு நோக்கியும், தென்மேற்கில் பால சாஸ்தாவும் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். குடமுருட்டி ஆற்றில் மிதந்து வந்த கருப்பண்ணஸ்வாமியின் மரத்தாலான பிம்பம் ஒன்றை ஊர்மக்கள் கண்டெடுத்து, ஆற்றங்கரையில் கோவில் எழுப்பி பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். மாமரத்தடியில் எழுந்தருளியிருப்பதால் மாவடியான் எனப் பிரசித்தம். சுற்று வட்டாரக் கிராமங்களிலுள்ள மக்களுக்கு கண் கண்ட தெய்வமாக விளங்குகிறார். இவ்வூரிலுள்ள பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி - பூதேவி சஹித ஸ்ரீநிவாசரும், ருக்மணி - சத்யபாமா சஹித நவநீத கிருஷ்ணனும் சேவை சாதிக்கின்றனர். விகனஸ மகரிஷி மூலவராகவும் உற்சவராகவும் எழுந்தருளியுள்ளார். வைகானச ஆகமத்தைச் சேர்ந்த அர்ச்சகர்களின் குடும்பங்கள் இங்கு வசிப்பதாக கூறுகின்றனர். வைகானச குலத்தில் பிறந்தவர்களுக்கு சங்கு - சக்ர தாரணம் செய்யப்படுவதில்லை. அவர்கள் கர்ப்ப வைஷ்ணவர்களாக கருதப்படுகிறார்கள். சிவாலயத்தில் விஜயவிடங்கேஸ்வரரும் சுகந்த குந்தளாம்பிகையும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.