அருள்மிகு ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி திருக்கோவில் (செந்தலை)

God Name : ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

ஒரு சமயம் அனந்தபத்மநாபருக்கு தாகம் எடுத்ததால், தண்ணீர் கொண்டு வருமாறு அனந்தன் எனப்படும் ஆதி சேஷனிடம் பணித்தாராம். கோமுகத்து வழியே வெளிச் சென்று வாயு மூலையில் நின்று தரையைக் கொத்தி, தீர்த்தக் கிணறு ஒன்றை ஏற்படுத்தினார் ஆதி சேஷன். தண்ணீர் கொண்டு வர வெளியே சென்றதால் வாகனமாய் இல்லை போலும். ஒரு வைகுண்ட ஏகாதேசி தினத்தன்று காலை கருடாழ்வாரின் தலையில் நாகப்பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டதாம். அதைக் கவனியாது துளசி தீர்த்தத்தைத் தெளித்தார் பட்டாச்சார்யார். அதை ஏற்றுக் கொண்ட பாம்பு எவ்வளவு விரட்டியும் போக மறுத்து அங்கேயே நிலை கொண்டதாம். அன்று முழுவதும் தீபாராதனை, அர்ச்சனை இவற்றை ஏற்றுக் கொண்ட பாம்பு மறு நாள் காணவில்லை எனக் கூறுகின்றனர்.
மூலவர்: ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி, தாயார்: ஸ்ரீ பரிமளவல்லி. மூலஸ்தானத்தில் ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி பத்மாசனமாக அமர்ந்த கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார். ஒன்பதடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான ஆகிருதியான திருவுருவம். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். சேஷ வாகனம் இல்லை. பரிமளவல்லித் தாயாரின் மூல விக்ரஹம் அழகாக இருக்கின்றது. தனி சந்நிதி கொண்டுள்ளார். நின்ற கோலத்தில் காணப்படும் கருடாழ்வாரை சேவிக்கலாம். மகா மண்டபத்தில் காணப்படும் ஒன்றரை அடி உயர பால ஆஞ்சநேயரின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.