அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் (திருப்பெரும்புலியூர்)

God Name : வியாக்ரபுரீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் தனது தந்தை மாத்யந்தனர் மூலமாக தில்லை நடராஜரின் பெருமைகளைக் கேட்டறிந்து, பின் அங்கு சென்று திருமூலநாதரை வழிபட்டார். இறைவனை பூஜிக்க ஏதுவாக மரங்களின் மீது இலகுவாக ஏறிப் பூ பறிக்க, தனக்கு புலிக்காலும், புலி நகமும் வேண்டுமென வரமாக பெற்றார். இதனால் முனிவர்க்கு வியாக்ரபாதர் எனும் பெயர் வந்தது. (வியாக்ரம் - புலி) தேவாரத்திருத்தலம் - ஐந்து புலியூர்களுள் ஒன்று
மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர், அம்பாள்: சௌந்தர்ய நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் வியாக்ரபுரீஸ்வரர். உயரமான பாணம் கொண்டு, ஒளி வீசும் அழகிய லிங்கம். வியாக்ரபாதர் வழிபட்டதால் வியாக்ரபுரீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். புலியூர் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். நான்கு அடுக்குகளாக தாமரை பீடத்தின் (கமல பீடத்தின்) மீது அமையப் பெற்ற மூலஸ்தானம். சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. அவற்றுள் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம் நேர்த்தியானது. வலச்சுற்றில் விநாயகர், முருகன் மற்றும் அனேக மூர்த்தங்களை தரிசிக்கலாம். நடராஜர் சபையில் நடராஜரின் பக்கத்தில் ஒரு புறம் வியாக்ரபாதரும் மறுபுறமாக பதஞ்சலியும் இருக்கின்றனர். அம்பாள் சௌந்தர்ய நாயகி எனப்படும் அழகம்மை பெயருக்கேற்றவாறு அழகாக இருக்கின்றாள்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.