அருள்மிகு பிருஹதீஸ்வரர் திருக்கோவில் எனப்படும் பெரிய கோவில் (தஞ்சாவூர்)
God Name : பிருஹதீஸ்வரர் எனப்படும் பெருவுடையார்
திருக்கழுக்குன்றம் கோவில்
அரியலூர்
Call : +91-
ராஜராஜேச்வரம், பெரிய கோவில், ப்ருகதீஸ்வரர் கோவில் என்றெல்லாம் பெயர்கள் கொண்டிருந்தாலும்  ்பெரிய கோவில் ்
என்றே பிரசித்தம். கி.பி. 1003ல் தொடங்கி 1009ல் நிறைவு பெற்ற இக் கோவிலை கட்டுவித்தவர் ராஜ ராஜ சோழன்.
சுந்தர சோழனுக்கும் - வானவன்மாதேவிக்கும் பிறந்த இரண்டாவது பிள்ளை அருண்மொழித் தேவன். தமக்கை ்
குந்தவை பிராட்டியாரால் வளர்க்கப்பட்டு அரியணை ஏறினான். ராஜ ராஜன் எனும் பெயர் கொண்டான்.
ராஜ ராஜ சோழனின் ஆட்சிக்காலம் பொற்காலமாக போற்றப்பட்டது.
மூலஸ்தானத்து விமானம் 216 அடி உயரம் கொண்டுள்ளது. பீடம் முதல் கலசம் வரை முழுவதுமாக கருங்கல் கொண்டு ்
கட்டப்பட்டது. உச்சியில் மூடப்பட்ட பிரமாந்திரக்கல் 80 டன் எடை உள்ளது. இந்த விமானத்திற்கு பொன் வேய்ந்து அழகு
பார்த்திருக்கின்றான் ராஜ ராஜ சோழன். விமானத்தின் மீதுள்ள கலசம் 12 அடி உயரம் கொண்டுள்ளது. 3083 பலம் ்
செம்பினால் உருவாக்கப்பட்டது. 2926 கழஞ்சு பொன் பு+சிய தகடு வேய்ந்துள்ளனர்.
விமானத்தை வேய பொன் தந்த ராஜராஜ சோழன், 829 கழஞ்சு எடையில் செய்யப் பெற்ற ஸ்ரீபலி எழுந்தருளும் தேவர்
திருமேனி உருவாக்க பொன்னும், 995 கழஞ்சு எடையில் செய்யப்பட்ட  ்பத்மத்துடன் கூடிய ஸ்ரீபலி பீடம் செய்ய பொன்னும் ்
கொடுத்துள்ளார்.
39925 கழஞ்சு தங்்க ஆபரணங்கள் (175 கிலோ) மற்றும் ஏராளமான வெள்ளிப் பாத்திரங்கள் ஆகியவை ராஜராஜனால் ்
இக்கோவிலுக்கு வழங்கப்பட்டு்ள்ளது. தேவையான பு+ஜா பாத்திரங்கள் அனைத்தையும் குந்தவை பிராட்டியார் ்
வழங்கியுள்ளார். பிரஹந் நாயகிக்கு 2343 கழஞ்சு தங்க ஆபரணங்களையும் குந்தவை பிராட்டியார் வழங்கியுள்ளார்.
தினமும் விநாயகருக்கு 150 வாழைப்பழம் நைவைத்யம் செய்ய வேண்டும் என்று நிபந்தித்த சக்ரவர்த்தி, ஆண்டுக்கு
150 ஓ 360 ஸ்ரீ 54000 பழங்களுக்கு ஏற்பாடு செய்யும் வகையில், அன்றைய விலையான ஒரு காசுக்கு 1200 பழங்கள் ்
என்ற அடிப்படையில், 360 காசுகளை ஆலய பண்டாரத்தில் முதலீடாக வைத்து, அதிலிருந்து வரும் வட்டியைக் (12.5மூ)  ்
கொண்டு தினமும் பழங்கள் வாங்கும் வகை செய்தார் என்று கூறப்படுகிறது.
காசு ஒன்றுக்கு 2 ஆடுகள், 2 காசுக்கு ஒரு பசு, 3 காசுக்கு ஒரு எருமை என்ற விலையை கொடுத்து ஆயிரக்கணக்கான ்
விலங்குகளை வாங்கி, கோவிலுக்கு அர்ப்பணித்தார். அதிலிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய் ஆகியவற்றை ்
கோவிலின் உபயோகத்திற்கு வைத்துக் கொள்ளுமாறு கூறினார் எனக் குறிப்பொன்று கூறுகிறது.
காலத்தால் கோவில் சிதிலம் அடையாமலிருக்க திருத்ர ப்ரஹந்மாதா தக்ஷிண மேரு யாகம் நடத்தி வழிபட்டுள்ளார் ்
ராஜராஜன்
1954ம் ஆண்டில் இருந்த பெரிய கோவிலின் தோற்றத்தை பிரிண்ட் செய்த 1000 ரூபாய் நோட்டை 48வது ரிசர்வ் பேங்க் ்
கவர்னர் வெளியிட்டுள்ளார் . சர் பெனகல் ராமாராவ் கையெழுத்திட்டுள்ளார் .
ஐக்ய நாட்டு கல்வி - அறிவியல் - பண்பாட்டு நிறுவனத்தால், 1987ம் ஆண்டு, இக் கோவிலை உலக பாரம்பர்ய சின்னமாக ்
அறிவிக்கப்பட்டது.
ராஜராஜ சோழனின் உருவம் பதித்த 2 ரூபாய் நோட்டு ஒன்றை, 1997ம் வருஷம், மத்ய அரசு வெளியிட்டது.
2010ம் ஆண்டு, பெரிய கோவில் கட்டி 1000 ஆண்டுகள் நிறைவு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. ்
(செப்படம்பர் 25, 26) அப்போது ரூ.5 முத்திரை நாணயம் வெளியிடப்பட்டது.
சிவாஜி கணேசனால் இவ்வாலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட வெள்ளையம்மாள் எனும் யானை 63 வயது வரை ்
வாழ்ந்து கோவில் பணிகளை செய்து சமீபத்தில் உயிர் நீத்தது எனக் குறிப்பொன்று கூறுகிறது.
மூலவர்: ப்ருஹதீஸ்வரர், அம்்பாள்: ப்ருஹந் நாயகி
மலையரண், காட்டரண், மதிலரண், நீர்அரண் என நான்கு அரண்களையும் கொண்ட கோவில். கோட்டை சுவர் வாயிலை ்
அடுத்துள்ள ஐந்தடுக்கு கோபுர வாசலுக்கு கேரளாந்தகன் நுழைவாயில் எனப் பெயர். அடுத்து மூன்று அடுக்குகளுடன் ்
ராஜ ராஜன் வாயில் அமைந்துள்ளது. அணுக்கன் திருவாசல் ஒன்றும் உள்ளது. ஏழு ஏக்கர் நிலப்பரப்பளவு கொண்டது.
மூலஸ்தானத்தை சுற்றி பிரதட்சிண மண்டபம் இருக்கின்றது. ப்ருகதீஸ்வரர் சந்நிதி பு+மி மட்டத்திற்கு மேலாக உயர்ந்த ்
மேடையில் அமைக்கப்பட்டு்ள்ளது. படிகள் ஏறி சென்றுதான் தரிசிக்க வேண்டும். இது ஒரு மாடக் கோவில் அமைப்பை ்
போன்றுள்ளது.
கருவறை வாசலின் இரு பக்கங்களிலும் 15 அடி உயரமுள்ள, ப்ரம்மாண்ட மோனோலித்திக் துவாரபாலகர்கள் காட்சி
தருகின்றனர் . முதிர்ந்த யானையை பெரிய மலைப்பாம்பு ஒன்று வாயைப் பிளந்து விழுங்க, அந்த மலைப்பாம்பு துவார
பாலகர்களின்கதையினுடைய உருளையை சுற்றிக் கொண்டிருக்க, கதையை விட பெரிய கை கால்கள் கொண்ட ்
துவாரபாலகர்களை உருவாக்கியுள்ளனர் . இத்தனை ப்ரம்மாண்டமான துவாரபாலகரின் சிலை என்னை விட ்
ப்ரம்மாண்டமான விஷயம் மேலே இருக்கிறது என கையை விரித்து சொல்வதாக அமைக்கப்பட்டு இருக்கிறது. ்
இந்த கை விரித்த முத்திரைக்கு விஸ்மயம் (பெரு வியப்பு) என்று பெயர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ப்ருஹதீஸ்வரர். ப்ரம்மாண்டமான திருமேனி. ப்ருஹத் ்
என்றால் மிகப் பெரிய எனப் பொருள். 13 அடி உயரம் கொண்ட பாணம். 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார்.
நர்மதா நதி தீரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட லிங்கம். அடிப்பகுதி நான்கு பட்டை, ்
நடுப்பகுதி எட்டுப் பட்டை, மேல் பகுதி வட்டம் என மூன்று அமைப்புகளுடன்கூடிய பாணம் -  ்மகுடாகம அடிப்படையில் ்
வழிப்பாடு முறைகளுடன் பு+ஜிக்கப்படுகிறது.
பெருவுடையார் எனப் போற்றப்படும் மூல லிங்கம் மூன்று பகுப்புகளாக பிரித்து நடுவே தூண் போன்ற லிங்க ்
அமைப்ப்ினை ஏற்படுத்தி, எண்பட்டை திருமேனியாக மிளிரச் செய்துள்ளனர். . 3.7 மீட்டர் உயரம். மேல் பாகத்தில் ்
பெரிய உருளை. பீட பகுதி சதுரமாக உள்ளது. ஆவுடையாரின் சுற்றளவு 54 அடி.
ஆராதனை மண்டபம், மஹா மண்டபம், ஸ்தபன மண்டபம், நர்த்தன மண்டபம், வாத்ய மண்டபம் என ஐந்து பிரிவுகளைக் ்
கொண்ட மிகப் பெரிய கற் கோவில்.
அன்னை ப்ரஹந் நாயகி தனிக் கோவில் கொண்டுள்ளார். பத்தடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. அழகு தமிழில் ்
பெரிய நாயகி என்பர். செப்புத் திருவுருவமாக போகசக்தி அம்மன் தரிசனம் தருகிறாள்.
அர்த்த மண்டபத்தில் மஹா கணபதி மற்றும் ஏழு விதமான கணபதிகள் - நின்ற, அமர்ந்த கோலங்களில் தரிசனம்
தருகின்றனர்.
சிற்ப நுணுக்கங்கள் மிகுந்திருக்கும் ்சுப்ரமண்யர் சந்நிதியில் எழுந்தருளியுள்ள மூலமூர்த்தியான ஆறுமுகம் - மயில் - ்
திருவாசி ஆகியன ஒரே சிலையாக அமைந்துள்ளன. ஏழடி உயரம்  ்கொண்ட அழகான திருவுருவம்.
தென் பிரகாரத்தில் வாராஹி கோவில் கொண்டுள்ளார். வாராஹிதான் ராஜ ராஜனின் இஷ்ட தெய்வம். இவளை ்
வழிபட்ட பின்னரே போருக்கு புறப்படுவான் ராஜ ராஜன். தட்சிணாமூர்த்தியை தரிசிக்க 21 படிகளேறிச் செல்ல ்
வேண்டும். ஆடல்வல்லான் சந்நிதியும் அழகாக அமைக்கப்பட்டு்ள்ளது.
மேற்கு பிரகாரத்தின் மத்தியில் கருவறைக்கு பின்புறமாக கருவு+ர் சித்தரின் சந்நிதி இருக்கின்றது. மேலை பிரகாரத்தில் ்
228 சிவலிங்கங்களை தரிசிக்கலாம். வெளிப் பிரகாரத்தில் 1008 சிவலிங்கங்கள்உள்ளன. அஷ்டதிக் பாலகர்களுக்கும் ்
அவரவர்களுக்கரிய திசைதனில் சந்நிதி அமைத்துள்ளனர்.
பிரகாரத்தில் சற்று உயர்வான இடத்தில் நந்தி மண்டபம் அமைத்துள்ளனர். ப்ரெஸ்கோ பெயிண்டிங் முறையில் வண்ண ்
ஓவியங்கள் நந்தி மண்டபத்து விதானத்தை அலங்கரிக்கின்றன.
12 அடி உயரம், 20 அடி நீளம், 8 அடி அகலம் கொண்டு 25 டன் எடை கொண்ட ஒரே கல்லில் உருவாக்்கப்பட்ட நந்தி ்
ப்ரம்மிக்க வைக்கும் அழகுடன் காணப்படுகிறது. கழுத்தில் சிவலிங்க மாலை அணிந்துள்ளது.
ஸ்ரீ பலித் தேவர், தட்சிணமேருவிடங்கர், ஆடல்வல்லான், சண்டேஸ்வரத் தேவர், சூரிய - சந்திரர்கள், ப்ரம்மா, விஷ்ணு, ்
சிவன் ஆகிய பஞ்சதேக மூர்த்திகள், வீணாதார தட்சிணாமூர்த்தி,  ்சுப்ரமண்யத்தேவர். நம்பிராட்டியார்களுடன் ்
மஹாவிஷ்ணு, பதஞ்சலி என அனேக உத்ஸவ மூர்த்திகள்.
சிவபெருமான் எழுந்தருளியுள்ள மூலஸ்தானத்து விமானம் 216 அடி உயரம் கொண்டுள்ளது. பீடம் முதல் கலசம் ்
வரை முழுவதுமாக கருங்கல் கொண்டு கட்டப்பட்டது. உச்சியில் மூடப்பட்ட பிரமாந்திரக்கல் 80 டன் எடை உள்ளது. ்
இந்த ப்ரம்மாண்டமான விமானத்தை தட்சிணமேரு என்ற அழைப்பார்கள்.
அழகி எனும் கிழவிக்கு சொந்தமான இந்த ஒற்றைக் கல்லை நான்கு மைல் தூரத்திற்கு சாரம் கட்டி புரட்டி எடுத்து ்
வந்துள்ளனர். கல் இருந்த இடம் தற்போது சாரப்பள்ளம் எனப்படுகிறது. ்
பிரம்மாந்திர தளத்து கல்லின் ஒவ்வொரு மூலையிலும் இரண்டு நந்திகள் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.