அருள்மிகு முன்குடுமீஸ்வரர் திருக்கோவில் (பொன் விளைந்த களத்தூர் - பி.வி.களத்தூர்)

God Name : குடுமீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

ஆதிகாலத்தில் பணிபுரிந்த இவ்வாலயத்து அர்ச்சகரின் மனைவி, சிவலிங்கத்திற்கு அணிவிக்கவிருக்கும் மாலையைத் தான் அணிந்துகொண்டு அழகு பார்ப்பாளாம். அவள் அணிந்த மாலைகளில் ஒன்று அரசனைச் சென்றடைந்தது. அதில் கேசம் இருப்பது கண்டு, கோபம் கொண்டான் மன்னன். அர்ச்சகரைத் தண்டிக்க முற்பட்டான். அர்ச்சகரையும், பக்தையையும் காப்பாற்றுவதற்காக, தனது சிரசில் குடுமி இருப்பதாகக் காட்டி அரசனின் கோபத்திலிருந்தும், அவன் அளிக்கவிருந்த தண்டனையிலிருந்தும் காப்பாற்றினார். நெற்கதிர்கள் பொன் மணிகளாக விளைந்ததால் பொன் விளைந்த களத்தூர் எனப் பெயர் கொண்டது. பசுமையான வயலின் நடுவே அமைந்துள்ள கோவில்.
மூலவர்: குடுமீஸ்வரர், அம்பாள்: மீனாட்சி. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் குடுமீஸ்வரர். அம்பாள் மீனாட்சி தனி சந்நிதி கொண்டுள்ளார். கோஷ்டத்தில் உள்ள மூர்த்தங்களும், பிரகார வலச்சுற்றிலுள்ள மூர்த்தங்களும் அழகாக இருக்கின்றன. மூலவரைப் பார்த்தபடி சூரிய-சந்திரர்கள் காணப்படுகின்றனர். விசாலமான பிரகாரம். துர்க்கை, பிரம்மா, விஷ்ணு, பிள்ளையார், தட்சிணாமூர்த்தி ஆகியோரை தரிசனம் செய்யலாம். கூற்றுவ நாயனாரின் திருவுருவம் இருக்கின்றது. தூண் ஒன்றில் காணப்படும் பஞ்சமுக லிங்க வடிவம் அற்புதமான அழகுடன் காணப்படுகின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.