அருள்மிகு பருதியப்பர் திருக்கோவில் (திருப்பரிதிநியமம்)

God Name : பரிதியப்பர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

அரியலூர்

Call : +91-

பரிதி எனப்படும் சூரியன் குன்ம நோய் கொண்டு அவதியுற்றான். தனது நோய் நீங்கி நலம் பெற வேண்டி இத்தலத்தில் தீர்த்தம் ஒன்றை உருவாக்கி, சிவலிங்க பிரதிஷ்டை செய்து, நித்ய வழிபாடுகள் செய்து, இவ்விறைவன் அருளால் நோய் நீங்கப் பெற்றான். பரிதி (சூரியன்) உருவாக்கிய கோவில் என்பதால் இவ்வூர் பரிதிநியமம் எனப்படுகிறது. பரிதி வழிபட்ட இறைவன் பரிதியப்பர் என அழைக்கப்படுகிறார். பிரம்மசர்மாவும் அவனது மனைவியும் சாபத்திற்குட்பட்டு கிளி வடிவம் கொண்டனர். இவ்விறைவனை வழிபட்டு சாபத்திலிருந்து விடுபட்டு சுய உருவம் பெற்றனர். சூரிய வம்சத்தில் தோன்றிய ஸ்ரீ ராமனின் முன்னோர்களில் ஒருவரான சிபிச்சக்ரவர்த்தி நிர்மாணித்த ஆலயம். மஹா சிவராத்திரி, ரத சப்தமி, அட்சய த்ருதியை, அன்னாபிஷேகம், தீபாவளி, கார்த்திகை பூர்ணிமா, ஆருத்ரா, சங்கராந்தி மற்றும் பங்குனியில் 10 நாட்கள் சூரிய பூஜை ஆகியவற்றை சிறப்புற நடத்துகின்றனர். மார்க்கண்டேயன் அருவமாக இருந்து கொண்டு சிவபூஜை செய்வதாக ஐதீகம். ஆகையால் இத்தலம் ஆயுள் விருத்தி ஸ்தலமாக கருதப்படுகிறது. தேவாரத் திருத்தலம் - பாஸ்கர க்ஷேத்திரம் - பிதுர் தோஷ பரிகார ஸ்தலம்.
மூலவர்: பரிதியப்பர், அம்பாள்: மங்களாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் பரிதியப்பர். ஒளிமயமான தோற்றத்துடன் காணப்படும் தேஜோமய லிங்கம். சூரியனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டவர். இவருக்கு பாஸ்கரேஸ்வரர், பரிதீசர் ஆகிய பெயர்களும் உண்டு. பங்குனி மாதம் 17, 18, 19 ஆகிய நாட்களில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமி மீது படர்ந்து மேலும் ஒளியூட்டுகின்றன. இந்த நிகழ்வை சூரிய நமஸ்காரம் என சிறப்பித்துக் கூறுவர். மூலவரின் நேர் எதிரே சூரியன் சிலாரூபமாக எழுந்தருளி தரிசனம் தருகிறார். அழகான கோஷ்ட மூர்த்தங்கள், கொடிமர விநாயகர், அதிகார நந்தி மற்றும் வலச்சுற்றில் பரிவார தேவதைகளை தரிசிக்கலாம். சூரிய சண்டிகேஸ்வரர், தேஜஸ் சண்டிகேஸ்வரர், சிவ சண்டிகேஸ்வரர் என மூன்று சண்டிகேஸ்வரர்களை தரிசிக்கலாம். மூன்று யுகங்களின் பிரதிநிதிகளாக எழுந்தருளியுள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.