அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோவில் (திருக்கானூர்)
God Name : செம்மேனிநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
ராமநாதபுரம்
Call : +91-
சிவபெருமானை நோக்கி தவமிருந்த பார்வதி தேவி, சிவபெருமானின் செம்மேனி கோலத்தை அதாவது ஜோதி வடிவத்தை தரிசித்த ஸ்தலம். க்ஷத்ரியர்களைக் கொன்ற தோஷம் நீங்க பரசுராமர் இவ்விறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றுள்ளார். சூரியன் வழிபட்ட ஸ்தலம்.
1924 ஆம் ஆண்டு கொள்ளிடத்து பெரு வெள்ளம் இவ்வாலயத்தை மூழ்கடித்ததால் மணல்மேடாகிப் போன இத்தலத்தை தற்போது மணல்மேடு என அழைக்கின்றனர்.
மூலவர்: செம்மேனிநாதர், அம்பாள்: சௌந்தர நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக சுயம்புவாக எழுந்தருளியுள்ளார் செம்மேனிநாதர். தேஜோ மயமாகக் காட்சி தரும் அழகிய லிங்க மூர்த்தம். இக்ஷீவனேஸ்வரர், கரும்பேஸ்வரர் ஆகிய திருநாமங்களும் உண்டு. ஏப்ரல் 2, 3, 4 தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
தனி சந்நிதியில் அழகே உருவாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள் சௌந்தர நாயகி எனப்படும் சிவயோக நாயகி. சாளக்ராமத்தால் உருவான திருமேனி.
அழகிய கோஷ்ட மூர்த்தங்களையும், வலச் சுற்றில் பரிவாரத் தேவதைகளையும் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.