அருள்மிகு ஆலந்துறையப்பர் திருக்கோயில் (கீழைப்பழுவூர்)

God Name : ஆலந்துறையப்பர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

ராமநாதபுரம்

Call : +91-

'பழு' என்றால் ஆலமரம். ஆலமரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட ஸ்தலம் என்பதால் பழுவூர் எனப் பெயர் கொண்டது. அன்னை தவமிருந்த இடம் என்பதால் இவ்வூரை யோகவனம் என்றும், அம்பாளை அருந்தவ நாயகி என்றும் கூறுவர். பரசுராமர் தன் தந்தையின் கட்டளைக்கிணங்க தனது தாயைக் கொன்றார். அந்தக் கொலைப்பழியும், தோஷமும் நீங்க, இவ்விறைவனை வழிபட்டு நற்கதி பெற்றார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. கோயிலின் வாசலுக்கு முன்பாக பரசுராமரின் திருவுருவம் இடம் பெற்றுள்ளது. இது பழுவேட்டரையர்களின் தலைநகரமாக இருந்ததாம். ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் என்பார்கள். பிரம்மஹத்தி தோஷம் நீங்க பிரார்த்தனை செய்கின்றனர். பிரிந்த அல்லது பிரியவிருக்கும் தம்பதியினர் இத்தலத்திற்கு வந்து சுவாமியையும் அம்பிகையையும் வழிபட்டால் ஒன்று சேர்வார்கள் எனக் கூறப்படுகிறது. மேலப்பழுவூரில் விஷ்ணுவின் குடைவரைக் கோயில் ஒன்றும் உள்ளது. இது ஒரு தேவாரத் திருத்தலம்.
மூலவர்: ஆலந்துறையப்பர்் அம்பாள்: அருந்தவ நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஆலந்துறையப்பர் எழுந்தருளியுள்ளார். வடமூலநாதர், யோகவனேஸ்வரர் ஆகிய திருநாமங்களும் உண்டு. குவளை சாத்தி அபிஷேகம் செய்கின்றனர். சாம்பிராணி தைலம் பூசுவார்கள். பங்குனி மாதம் 18ஆம் நாள் சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. அன்னை அருந்தவ நாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். இத்தலத்தில் புற்று மண்ணால் ஒரு லிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டை செய்து வழிபட்டு அன்னை பார்வதி தவமிருந்தாள். இதனால் அருந்தவ நாயகி என்ற பெயரைப் பெற்றாள். இறைவிக்கு யோகதபஸ்வினி என்ற திருநாமமும் உண்டு. நிலைக்கல் ஒன்றில் சயனக் கோலத்தில் பரசுராமரைக் காணலாம். கமலை கணபதி, முருகப் பெருமான், பஞ்சபூத லிங்கங்கள், மகாலட்சுமி, சிவ துர்க்கை மற்றும் சப்த கன்னியர்களை தரிசிக்கலாம். சண்டிகேஸ்வரரின் பஞ்சலோக சிலை ஒன்று அழகாக உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.