அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் (பண்ணாரி)
God Name : பண்ணாரி மாரியம்மன்
மாரியம்மன் கோயில்
நாகப்பட்டினம்
Call : +91-
ஸ்தல வரலாறு
கானகங்கள் நிறைந்த பகுதியாக இருந்ததால், மக்கள் இங்கு கால்நடைகளை
மேய்த்து வந்தனர். மேய்ந்து கொண்டிருந்த பசுக்களில் ஒரு காராம்பசு மட்டும்
தினமும் பால் கறக்காமல் இருந்ததுடன், கன்றுக்கும் பால் தராமல் இருந்தது.
இதனை பின் தொடர்ந்து கண்காணித்ததில், ஒரு புதர் அருகே சென்றதும்,
பாலை தானகவே சொரிவதைக் கண்டனர். கணம்புற்கள் நிறைந்திருந்த
அந்த புதரிலுள்ள புற்றில் லிங்க வடிவில் மாரியம்மன் இருப்பதைக்
கண்டனர். அப்போது கூட்டத்திலிருந்த பெரியவர் ஒருவர் மூலமாக
அருள்வாக்காக வெளிப்படுத்தி தான் மைசூரிலிரந்து வந்த அம்மன்
என்ற தகவல் கிடைத்தது.
மைசூரிலுள்ள சாமுண்டீஸ்வரி அன்னையை, கேரள மந்திரவாதி
ஒருவன் தனது சக்தியால் கட்டிப் போட்டு, மலை நாடு செல்லவிருந்த
கேரள மந்திரவாதி, இவ்வூர் வழியே வருகையில், தன்னை திரும்பி
பார்க்க கூடாது என்று அம்மன் விதித்திருந்த நிபந்தனையை மீறி,
சிலம்பொலி கேட்காததால் திரும்பி பார்த்தான் எனவும்,
அன்று முதல் அம்மன் இங்கேயே நிலை கொண்டாள் எனவும்
ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்.
பங்குனி மாச அமாவாசையை அடுத்த திங்கள் பூச்சாற்று ஆரம்பம்.
மறு நாள் அம்மன் சப்பரத்தில் ஊர்வலம். 9ம் நாள் செவ்வாய் அக்னி
குண்ட திருவிழா ஏழு நாட்கள் தொடர்ந்து நடக்கும்.
பல ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள். எட்டாம் நாள் விழாவில்
சோலகர் எனும் மலைவாசிகளும், அருந்ததியினரும் இசைக்கருவிகளை
முழக்குவார்கள். பீனாச்சி எனும் ஊது கருவியை இசைப்பார்கள்.
9ம்நாள் அக்னி கம்பம் ஏற்றப்படும். அக்னி குண்ட திருவிழா முடிந்த
8ம் நாள் திங்கட்கிழமை மறுபூசை திருவிழா நடைபெறும்.
கண் மற்றும் நரம்பு சம்பந்த
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள பண்ணாரி மாரியம்மன் சுயம்பு
வடிவினள்.
கருணை பொங்கும் விழிகளுடனும், பக்தர்களின் குறைகளை தீர்க்கும் கருணா
மூர்த்தியாகவும் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறாள். மூலவர் - உத்ஸவர்
இருவரையுமே பார்த்துக் கொண்டே இருக்கலாம், அத்தனை அழகு.
அம்மன் சந்நிதியை அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் பொம்மராய சுவாமி மேற்கு
பார்த்து தரிசனம் தருகிறார். முன்மண்டபத்தில் கிழக்கு நோக்கியபடி விநாயகப்
பெருமான் தரிசனம் தருகிறார். தெற்கு பார்த்த மேடை மீது மாதேசுவரரின்
திருவுருவத்தை தரிசிக்கலாம். பண்ணாரிஸ்வரர் சிவலிங்க சுயம்பு வடிவினர்.
தெப்பக்கிணறு போகும் வழியில் வடபறமாக வண்டி முனியப்பன் எழுந்தருளியுள்ளார்.
முன்நாளில், கணம்புற்களால் குடில் அமைத்து பச்சிலை பந்தலின் கீழ் கோவில்
கொண்டவள் அன்னை. பின்னர் கூரையில் இருந்ததாகவும், கூரையை நீக்கிவிட்டு
ஓடுகளாலான முகப்பு கட்டப்பட்டது எனவும் தெரிவிக்கின்றனர். தற்போது கோபுரத்துடன் கூடிய கட்டடமாக நிற்கிறது.
ஆலயத்திலிருந்து 3 கல் தொலைவில் மாதேஸ்வரன் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.