அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில் (லால்குடி)

God Name : சப்தரிஷீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

தூத்துக்குடி

Call : +91-

சப்த ரிஷிகள் இத்தலத்தில் தவம் மேற்கொண்டு முக்தி பெற்றதால் திருத்தவத்துறை எனப் பெயர் பெற்றது. மாலிக் கபூரின் படையெடுப்பு காலத்தில் இக்கோவிலின் கோபுரம் சிவப்பு வர்ணம் கொண்டிருந்ததைப் பார்த்து லால்குடி என உருது மொழியில் பெயரிட்டதாக கூறப்படுகிறது. சப்த ரிஷிகளின் ஆஸ்ரமங்களருகே உள்ள தாமரைப் பொய்கை அருகே, தனித்து விடப்பட்ட குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. அதற்கு பாலூட்டுமாறு தனது பத்தினியான அருந்ததியிடம் கூறுகிறார் வசிஷ்டர். பூஜைக்கு மலர் பறிக்க சென்று கொண்டிருந்ததால், அருந்ததி அந்த பணியை செய்யவில்லை. கோபம் கொண்ட வசிஷ்டர் தனது மனைவியை தனிமைப்படுத்தி தண்டித்தார். மற்ற ரிஷி பத்னிகள் யாவரும் அருந்ததியை சார்ந்தும், ரிஷிகள் வசிஷ்டரை பெருமைப்படுத்தியும் வாதிட்டனர். அப்போது அழுது கொண்டிருந்த குழந்தை ஆறுமுகனாக மாறி சிரித்தான். சினம் தலைக்கேறி, தத்தம் பத்னிகளை விலக்கி வைத்த ஏழு ரிஷிகளும் தங்களது பிழை பொறுத்து மன்னித்தருள வேண்டினர். பின்னர் முருகனின் ஆலோசனைப்படி, தவமிருந்து இவ்விறைவனை வழிபட்டனர். அவர்களை தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்ட இறைவன் என்பதால், இவ்விறைவன் சப்தரிஷீஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார். தேவார வைப்புத்தலம்.
மூலவர்: சப்தரிஷீஸ்வரர், அம்பாள்: மஹா சம்பத் கௌரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சப்தரிஷீஸ்வரர். அழகிய சுயம்பு லிங்கம். மேற்கு பார்த்த சந்நிதி. இவருக்கு திருத்தவத்துறை நாதர் மற்றும் தேஜோவிடங்கர் ஆகிய திருநாமங்களும் உண்டு. சப்த ரிஷிகளை ஆட்கொண்ட நிகழ்வின் அடையாளமாக, மூலவரின் சிரசின் உச்சியில் ஏழு பள்ளங்கள் இருக்கின்றன. அம்பாள் மஹா சம்பத் கௌரி எனப்படும் பெரியநாயகி கிழக்கு பார்த்து எழுந்தருளி, தனி சந்நிதி கொண்டுள்ளார். மணக்கோலத்தில் காட்சி தருகிறாள். சரஸ்வதி தேவி தனி சந்நிதி கொண்டுள்ளார். மஹாலட்சுமி, பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், பைரவி எனப்படும் காளி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஜடாமுடியுடன் கூடிய அழகான திருவுருவமாக, கையில் வீணை கொண்டு காட்சி தரும் வீணாதார தட்சிணாமூர்த்தி மற்றும் விசேஷ யந்திரம் ஸ்தாபிக்கப்பட்ட ஜ்வரஹரேஸ்வரர் ஆகிய விசேஷ மூர்த்தங்களை தரிசிக்கலாம். சூரியனை நோக்கியே மற்ற கிரகங்கள் இருப்பது கூடுதல் விசேஷம் என்கிறார் சிவாச்சார்யார். அத்ரி, ப்ருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கௌதமர், ஆங்கிரஸர், மரீசி ஆகிய சப்த ரிஷிகளின் திருவுருவங்களை தரிசிக்கலாம். வியாழன்தோறும் ஒரு ரிஷி என்று அபிஷேக ஆராதனைகள் செய்தால் திருமணத்தடை நீங்குவதாக நம்பிக்கை.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.