அருள்மிகு சத்யவாகீஸ்வரர் திருக்கோவில் (கீழ் அன்பில்)
God Name : சத்யவாகீசர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
ஸ்தலத்தின் பெயர் அன்பில். கோவிலின் பெயர் ஆலந்துறை. இரண்டும் சேர்ந்து அன்பிலாந்துறை எனப்படுகிறது.
அன்பிலாந்துறை கொள்ளிடத்தின் வடகரையில் இருந்தது. திருக்கானூர் தரிசனத்தை முடித்துவிட்டு கொள்ளிடத்தின் தென்கரை வந்து சேர்ந்த ஞானசம்பந்தப் பெருமான், ஆற்று வெள்ளம் பிரவாகமாகப் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்து, கரையை கடக்க முடியாமல், இக்கரையிலிருந்தே பாடியுள்ளார்.
இவ்வாலயத்தையும் ஊரையும் சேர்த்தே பாடிய அந்த பதிகத்தை, ஆலயத்துக்குள்ளிருந்த பிள்ளையார் தலை சாய்த்து - செவி சாய்த்துக் கேட்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
தேவாரத் திருத்தலம்.
மூலவர்: சத்யவாகீசர், அம்பாள்: சௌந்தரநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சத்யவாகீசர். அழகிய சுயம்பு லிங்கம். கிழக்கு பார்த்த சந்நிதி. சுவாமி சந்நிதியின் இடப்புறமாக அம்பாள் சௌந்தரநாயகி தனி சந்நிதிகொண்டுள்ளார். கோஷ்டத்து மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன.
மூலஸ்தானத்தைச் சுற்றியுள்ள உண்ணாழியில் செவி சாய்த்த விநாயகர் அமர்ந்து ஆசி வழங்குகிறார். ஒரு காலை மடித்து, மற்றொரு காலை குத்துக்காலிட்டு ஊன்றிக்கொண்டு, முடி சாய்த்து - செவி சாய்த்து காட்சி தருகிறார். அற்புதமான திருவுருவம்.
சுப்ரமண்யர், காசி விசாலாட்சி உடனாய காசி விஸ்வநாதர், சப்த கன்னியர்கள், பிட்சாடனர், பைரவர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.