அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோவில் (ஆத்தூர்)
God Name : ஸ்ரீ முக்தீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
காஷ்யப முனிவரின் இரண்டு பத்தினிகளான கத்துரு மற்றும் சுபருணை இருவரும், தங்களுக்குள் யார் அழகானவள் என்று போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். நடுவராக செயல்பட்ட காஷ்யபர் கத்துருவுக்கு சாதகமாக தீர்ப்புக் கூறினார். சுபருணை நிபந்தனைப்படி சிறைவாசம் செய்கின்றாள்.
தாயின் விடுதலை வேண்டி நின்ற சுபருணையின் புதல்வனான கருடனிடம் அமிர்தம் எடுத்துக் கொண்டுவந்தால், தாயை விடுவிப்பதாகக் கூறிய கத்துருவின் சொல்படி அமிர்தம் எடுத்த வரப் போகிறார் கருடன். அமிர்தத்துடன் திரும்பும்போது, ஏற்பட்ட இன்னல்களிலிருந்து விடுபட இவ்விறைவனை வழிபடுகிறான் கருடன். பின்னர் கொண்டு வந்த அமிர்தத்தை கொடுத்து, தாயை சிறையிலிருந்து மீட்கிறான் கருடன்.
பாலாற்றங்கரை ஓரமாக இத்தலம் உள்ளதால், (ஆறு - ஊர்) ஆற்றூர் எனப் பெயர் கொண்டு, பின் நாளடைவில் மருவி ஆத்தூர் என்றானது. பண்டைக் காலத்தில் நதிப்புறம் என்ற பெயர் வழக்கத்தில் இருந்ததாம்.
மூலவர்: ஸ்ரீ முக்தீஸ்வரர், அம்பாள்: தர்மசம்வர்த்தினி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் ஸ்ரீ முக்தீஸ்வரர். மூன்றடி உயரம் கொண்ட அழகிய பாணமும், தாமரை மலரின் வடிவம் கொண்ட ஆவுடையும் கொண்டு தரிசனம் தருகின்றார். கிழக்கு பார்த்த சந்நிதி. பாணத்தின் குறுக்கே செல்லும் ரேகை போன்ற கோடு அர்த்தநாரீஸ்வரராக தோற்றமளிக்கிறது.
நந்திகேஸ்வரர் முன்பாக நவதுவாரங்கள் கொண்ட ஜன்னல்.
அம்பாள் தர்மசம்வர்த்தினி எனப்படும் அறம் வளர்த்த நாயகி தெற்கு பார்த்த சந்நிதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.
வள்ளி-தெய்வயானை உடனாய ஆறுமுகப் பெருமான், தட்சிணாமூர்த்தி ஆகிய திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. அந்நாளில் பிரபலமாக வழிபடப்பட்ட ஜ்யேஷடா தேவியின் திருவுருவம் பிரகாரத்தில் உள்ளது. சகல ஐஸ்வர்யங்களையும் அளிக்க வல்லவள். இவளை வழிபட்டால் தரித்திரம் நீங்கும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.