அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் (உறையூர்)
God Name : தான்தோன்றீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
தூத்துக்குடி
Call : +91-
காந்திமதி எனும் சிவபக்தை, உறையூரிலிருந்து திருச்சிக்கு தினமும் நடந்தே சென்று தாயுமானவ சுவாமியை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டவள். அவள் கர்ப்பிணியான நிலையில் நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு, மலர்த்தோட்டம் ஒன்றில் அமர்ந்து தாயுமானவரை வேண்டுகிறாள்.
அவளது நிலைக்கு இரங்கிய இறைவன் அவள் இருக்கும் இடத்திலேயே சுயம்புவாகத் தோன்றி, அவள் வழிபட வழி வகுத்து, சுகப்பிரசவத்திற்கும் அருளினார். அந்த செவ்வந்தித் தோட்டத்திலேயே இறைவனுக்குக் கோவில் எழுப்பினான் சூரவாதித்த சோழன்.
சுமங்கலிகளும் கர்ப்பிணிகளும் வழிபட்டு நற்பலன்களை அடைகின்றனர்.
மூலவர்: தான்தோன்றீஸ்வரர்் அம்பாள்: குங்குமவல்லி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக தான்தோன்றீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். ஏழடி உயரம் உள்ள லிங்க பாணம். மூன்றடி சதுர ஆவுடையாரில் எழுந்தருளியுள்ள அழகிய திருமேனி. இது தாயுமானவரின் அவதாரம் என்கின்றனர்.
அம்பாள் குங்குமவல்லி தெற்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். வருடாவருடம் தை மாதத்தில் வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடத்துகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.