அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோவில் (திருக்கடம்பந்துறை)

God Name : கடம்ப வன நாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

மதுரை

Call : +91-

தூம்ரலோசனன் எனும் அசுரன் அனைவரையும் துன்புறுத்தி வந்தான். அம்பாள் துர்க்கை வடிவம் கொண்டு அவனை அழிக்க வந்தாள். அம்பாளுக்கு உதவியாக போர் புரிய வந்தனர் சப்த கன்னியர்கள். காத்யாயன மகரிஷியின் ஆஸ்ரமத்திற்குள் ஒளிந்து கொண்டான் தூம்ரலோசனன். முனிவர் வேடத்தில் அசுரன் இருப்பதாக கருதிய சப்த கன்னியர்கள் முனிவரை அழித்து விட்டதால் அவர்களை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. தாங்கள் கொண்ட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட இங்கு தவமிருந்தனர் சப்த கன்னியர்கள். அவர்களுக்கு கடம்ப மரத்தடியில் தைப்பூசத்தன்று காட்சி தந்ததாக ஐதீகம். கோவில் கடம்பர், ஆதி கடம்பர், வழி கடம்பர், இளங் கடம்பர், பெருங் கடம்பர் எனும் ஐந்து கடம்பர்களுள் இவர் இரண்டாவது கடம்பர். பிரம்மன் ரதோத்ஸவம் செய்ததால் பிரம்மபுரி என்று பெயர். பலாசவனம் என்றும் கூறுவர். அகஸ்திய, கண்வ முனிவர்களுக்கும், தேவர்களுக்கும், சப்த கன்னியர்களுக்கும் கடம்ப மரத்தடியில் இறைவன் காட்சியருளிய ஸ்தலம். சோமாசுரனிடமிருந்து வேதங்களை கைப்பற்றும் முன் விஷ்ணு வழிபட்ட ஸ்தலம். அக்னி வழிபட்ட ஸ்தலம். இத்தலத்தில் ஐப்பசி முதல் கட்ட ஸ்நானம் விசேஷம் என்பர். காவிரியில் அம்பாளுடன் இறைவன் எழுந்தருளும் இடம். கார்த்திகையில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. மாசி மகத்தில் பிரம்மோத்ஸவம் 10 நாட்கள். தைப்பூசத் திருவிழா 13 நாட்கள். தைப்பூசத் திருவிழாவின்போது பேட்டவாய்த்தலை, சிவாயம், கருப்பத்தூர், இராஜேந்திரம், முசிறி, வெள்ளூர் ஆகிய இடங்களிலிருந்து எழுந்தருளும் எட்டு ரிஷாபாரூடர்களை ஒரே சமயத்தில் தரிசிக்கும் வாய்ப்பை தருகிறது. தேவாரத் திருத்தலம்.
மூலவர்: கடம்ப வன நாதர்் அம்பாள்: முற்றிலா முலையம்மை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கடம்ப வன நாதர். சுயம்பு லிங்கம். காசியில் இருப்பது போல வாமதேவ முகமாக வடக்கு நோக்கி எழுந்தருளியிருப்பது விசேஷம். கருவறையில் லிங்கத்தின் பின்புறமாக சப்தகன்னியர்கள் புடைப்பு சிற்பங்களாக காட்சி தருவது வேறெங்கும் தரிசிக்காத காட்சி. இத்தலத்தில் சப்த கன்னியர்களுக்கு பாதுகாவலாக இறைவன் இருப்பதாக ஐதீகம். சிவபெருமான் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளதால் கோஷ்டத்து மூர்த்தங்கள் யாவும் திசை மாறி காணப்படுகின்றனர். திரிதள விமானம். கிழக்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் முற்றிலா முலையம்மை எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பால குஜாம்பாள் என்ற திருநாமமும் உண்டு. அம்பாள் சந்நிதியின் முன்புறமாக பரமநாதர் காவல் மூர்த்தியாக உள்ளார். இவருக்கு பாசிப்பயறு பாயசம் நைவேத்தியம் செய்கின்றனர். அனுக்ஞை விநாயகரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. இரண்டு நடராஜர்கள் மற்றும் இரண்டு சோமாஸ்கந்தர்கள் தரிசிக்கலாம். ஒரு நடராஜ மூர்த்தியின் திருவுருவத்தின் சிரசில் பிறைச் சந்திரன் சூடியுள்ளார் மற்றும் திருவடிகளருகே முயலகன் இல்லாமல் காட்சி தருவது வித்தியாசமான கோலம். காலை தரிசனம் சிறந்தது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.