அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் திருக்கோயில் (அய்யர்மலை)
God Name : ரத்னகிரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
மதுரை
Call : +91-
நவரத்னங்களைக் குறிக்கும் வகையில் ஒன்பது பாறைகளுக்கு இடையே இருப்பதால் மாணிக்கமலை (ரத்னகிரி) எனவும், மன்னன் வீசிய வாளைத் தடுத்ததால் வாட்போக்கி எனவும் அழைக்கின்றனர். பஞ்ச பாண்டவர்கள் தங்கியதால் ஐவர் மலை எனப் பெயர்பெற்று, பின்னர் மருவி ஐயர் மலை என்றானதாகவும் கூறப்படுகிறது.
மலைக் கோவிலும் பிரகாரங்களும் ஓம் எனும் வடிவில் உள்ளதால் சிவாயமலை என்றும் கூறப்படுவதுண்டு.
ஆரியராஜன் ஒருவன் இழந்த ரத்ன கிரீடத்தைப் பெற விரும்பி இத்தலத்திற்கு வந்தான். அந்தணர் வடிவில் தோன்றிய இறைவன், இங்குள்ள நீர்த் தொட்டி ஒன்றைக் காண்பித்து அதில் நீரை நிரப்புமாறு பணித்தார். எவ்வளவு நீரைக் கொட்டினாலும் தொட்டி நிரம்பாததால் ஆத்திரம் கொண்ட அரசன், அந்தணனை வாளால் வெட்ட முற்பட்டான். அந்தணர் உரு நீங்கி சுயவுருவம் காட்டிய சிவபெருமான், அவ்வாளைப் போக்கி, ரத்ன கிரீடத்தைக் காண்பித்தார். அதனால் ரத்னகிரீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். வெட்டுண்ட தழும்பைக் கொண்டதால் முடித்தழும்பர் என்றானார்.
இடையன் ஒருவன் தினமும் ஒரு குடம் பாலை அபிஷேகம் செய்து வந்தான். ஒரு நாள் அவனது பால் குடத்தை காக்கை ஒன்று கவிழ்த்து விட்டது. இதனால் மனம் வருந்திய பக்தனுக்காக காகத்தை எரித்தார். இந்த நிகழ்விற்குப் பிறகு இன்றைய நாள் வரை காக்கை மண்டபத்தைத் தாண்டி காக்கைகள் பறப்பதில்லை.
பூம்புகாரைச் சேர்ந்த வணிகர்கள் இத்தலம் வந்து தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை பதினொன்றாகப் பிரித்தனர். பல முறை பிரித்தும் அவை பன்னிரெண்டு பங்குளாகவே பிரிந்தன. 12வது பங்கை இறைவனுக்கே தந்து விட்டனர். அது முதல் வருடா வருடம் தங்களது வருவாயின் 12வது பங்கை இவ்விறைவனுக்கே தருகின்றனர். பன்னிரண்டாம் செட்டியார்கள் என்றழைக்கப்படும் இவ்வணிகர்களுக்கு இவ்விறைவனே குல தெய்வமாக விளங்குகிறார்.
மலையடிவாரம்:
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ தண்டபாணி, மற்றும் ஸ்ரீ கருப்பண்ணஸ்வாமி ஆகியோரை மலையடிவாரத்தில் தரிசிக்கலாம்.
மலை:
1178 அடி உயரமும் (342மீ) 4 கி.மீ சுற்றளவும் கொண்ட மலை - ஏறிச் செல்ல 1017 படிக்கட்டுக்கள் உள்ளன. போகும் வழியில் சப்த மாதர்களை தரிசிக்கலாம். லட்ச தீப மண்டபம், ஏகாலியர் மண்டபம், கம்பத்தடி மண்டபம், காக்கை மண்டபம் ஆகிய மண்டபங்களைக் காணலாம். அடிவாரத்தில் நினைத்த காரியங்கள் நடக்குமா என்றறியும் சகுனக்குன்று உள்ளது. 750 படிகள் கடந்ததும் வரும் உகந்தாம்படி எனும் இடத்தில் விநாயகரையும், கரும்பார் குழலி அன்னையையும் தரிசிக்கலாம்.
மலைக்கோவில்:
மூலவர்: ரத்னகிரீஸ்வரர், அம்பாள்: கரும்பார் குழலி
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ரத்னகிரீஸ்வரர். உயரமான பாணம் கொண்ட ஒளி வீசும் தேஜோமய லிங்கம். சுயம்புவாகத் தோன்றியவர். கம்பீரமான தோற்றம் கொண்ட அழகிய சிவலிங்க மூர்த்தம். மேற்கு நோக்கிய சந்நிதி.
வெட்டுப்பட்ட வாட்குறி திருமுடியில் காணப்படுகிறது. இதனால் முடித்தழும்பர் எனும் திருநாமத்தைப் பெற்றார். மதிய வேளையில் அகஸ்தியர் தரிசித்தமையால் மதிய சுந்தரர் எனப் பெயர் கொண்டார்.
சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து கோமுகம் வழியாக வரும் பாலை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்து மறு நாள் காலை பார்த்தால் தயிராகிவிடும். உறை ஊற்றாமலேயே தயிராகிறது.
கிழக்குப் பார்த்த சந்நிதியில் அம்பாள் கரும்பார் குழலி எனும் அராளகேசி எழுந்தருளி அருள்பாலிக்கிறாள்.
கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், ஆறுமுகன், விசாலாட்சி உடனாய விஸ்வநாதர், பைரவர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடி பூஜை நடக்கின்றது. மலையைச் சுற்றி கிரிவலம் வருகின்றனர். மதிய தரிசனம் இங்கு விசேஷமானது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.