அருள்மிகு சிம்மபுரீஸ்வரர் திருக்கோவில் (கருப்பத்தூர்)
God Name : சிம்மபுரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
மதுரை
Call : +91-
அம்பாள் சந்நிதி எதிரேயுள்ள தொட்டியில் மஞ்சள் அரைத்துப் போடுகிறார்கள். இந்திரன் அம்பாளைப் பூஜித்தபோது மலர்கள் மஞ்சளாக மாறி முன்னாலுள்ள தொட்டியில் விழுந்ததாம். இதனால் பக்தர்கள் மஞ்சளைத் தொட்டியிலிடுவது வழக்கமானது.
ஹிரண்ய வதத்தினால் கொண்ட தோஷம் நீங்க, லட்சுமி நரசிம்மர் இவ்விறைவனை வழிபட்டுள்ளதாக ஐதீகம்.
கும்பாபிஷேகப் பணிகளின்போது லிங்கத்தின் ஆவுடையின் அடியைக் காண முடியாமல் கஷ்டப்பட்டதாக அர்ச்சகர் தெரிவிக்கின்றார்.
மூலவர்: சிம்மபுரீஸ்வரர், அம்பாள்: சுகந்த குந்தளாம்பாள்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக சிம்மபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வழிபட்டதால் இறைவனுக்கு சிம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் ஏற்பட்டது. அம்பாள் சுகந்த குந்தளாம்பாள் மிகுந்த வரப்பிரசாதியாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
சௌந்தர்ய மஹாலட்சுமி, சப்த கன்னிகைகள், பிள்ளையார், முருகன் ஆகிய அழகிய கோஷ்ட மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். வலஞ்சுழி விநாயகரும், ஆறுமுகனும், அஷ்ட பைரவர்களும் எழிலான திருவுருவங்கள்.
நந்தியம் பெருமான் வித்தியாசமான கோலத்தில் தரிசனம் தருகிறார். எழுந்த கோலம். ஒரு காது அடங்கியும் மற்றொரு காது பெரிய துவாரம் கொண்டும் காணப்படுகின்றன. காதின் பெரிய துவாரம் வழியே, பக்தர்களின் பிரார்த்தனைகளை வாங்கி, இறைவனிடம் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.