அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில் - மலைக் கோவில் - ஆப்பூர் கிராமம்
God Name : மருந்தீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
பூலோகத்திலுள்ள பல மலைகளில் மருத்துவ மூலிகைகளைத் தேடி அலைந்தனர் அஸ்வினித் தேவர்கள். நாரதரின் யோசனைப்படி இந்த மலைக்கு வந்து தேட ஆரம்பித்தனர். இங்கும் கிடைக்காது போனதால் ஸ்வாமியையும் அம்பாளையும் வழிபட்டு வேண்டினர். அவர்களது அறியாமை இருளைப் போக்கி, மூலிகைகள் இருக்குமிடத்தை காண்பித்த அம்பாள் இருள்நீக்கி எனப் பெயர் கொண்டாள்.
மலை முழுவதுமாக மூலிகைகள் செறிந்து கிடப்பதைக் கண்டு அஸ்வினித் தேவர்கள் சந்தோஷப்பட்டனர். அதிலும் பலா அதிபலா எனும் இரண்டு மூலிகைகள் கிடைத்தது சிறப்பானது. இவற்றிலிருந்து உருவான மந்திரங்களைத்தான் விஸ்வாமித்ரர் ராம-லட்சுமணர்களுக்கு உபதேசித்தார் எனக் கூறுவர். மூலிகைகள் மண்டிக் கிடந்ததால் ஓளஷதகிரி எனப் பெயர் கொண்டது.
அகஸ்தியர் இவ்விறைவனை வழிபட்டு மருத்துவ மூலிகைகளைப் பற்றித் தெரிந்து கொண்டதாக கூறுவர்.
மூலவர்: மருந்தீஸ்வரர், அம்பாள்: இருள்நீக்கி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் மருந்தீஸ்வரர். உயரமான பாணத்துடன் கூடிய அழகிய திருமேனி. மேற்கு நோக்கிய திருமுகம் என்பதால் கோமுகம் மாறியுள்ளது. ஓளஷதேஸ்வரர் என்று வடமொழியில் அழைக்கின்றனர். கருவறையின் சாளரத்தின் மேலே அழகான சிற்பங்களாக ரிஷபாரூடரை தரிசிக்கலாம்.
ஸ்வாமி கோஷ்டத்து மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன. அமர்ந்த கோலத்தில் சதுர்முக சண்டேஸ்வரர் காட்சி தருகின்றார். பைரவரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது.
கிழக்கு சுற்றிலுள்ள சந்நிதியில் அம்பாள் இருள்நீக்கி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பாசாங்குசம் கொண்ட மேற்கரங்களுடனும், அபய-வரத ஹஸ்தங்களுடனும் தரிசனம் தருகின்றாள். அந்தக நிவாரணி என்று வடமொழியில் அழைப்பார்கள்.
கொடிமரம் அருகே உள்ள பள்ளத்திலிருந்து மண்ணை எடுத்து விபூதியாக தரித்துக் கொள்கின்றனர். மருந்தாகவும் உட்கொள்கின்றனர்.
60 படிக்கட்டுக்கள் கொண்ட நடைவாவிக் கிணறு ஒன்றும் உள்ளது. நடைபாதையில் இறங்குவது போல் நடந்தால், இறங்கி நீர்நிலை அருகே போகலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.