அருள்மிகு கல்யாண விகிர்தேஸ்வரர் திருக்கோவில் (வெஞ்சமாக்கூடல்)

God Name : ஸ்ரீ கல்யாண விகிர்தேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

மதுரை

Call : +91-

ஆலயத்தின் பின்புறமாக குழகன் ஆறு (குடகனாறு என்றும் அழைக்கப்படும்) ஓடுகிறது. இதன் அருகில் ஓடும் சிற்றாற்றுடன் சேர்ந்து, சற்றுத் தொலைவில் ஓடும் அமராவதி ஆற்றுடன் கலப்பதால், இவ்வூர் கூடல் என அழைக்கப்படலாயிற்று. வெஞ்சமன் எனும் வேட்டுவ அரசன் ஆண்ட பகுதி என்பதால் வெஞ்சமாக்கூடல் எனப் பெயர் பெற்றது. சுந்தரர் பொருள் வேண்டிப் பாடியபோது, இறைவன் தன்னிடம் பொருள் இல்லையே என எண்ணி, ஒரு மூதாட்டியிடம் தன் பிள்ளைகளை அடகு வைத்துப் பொருள் பெற்றுத் தந்ததாக ஒரு கதை நிலவுகிறது. அந்த மூதாட்டியாக வந்தது ஈஸ்வரிதான் என்றும் கூறுவர். இதை மெய்ப்பிக்கும் வகையில், வெஞ்சமாக்கூடலின் கிராம தேவதையாக பார்வதி தேவியே பொன்பரப்பி அம்மன் என்ற பெயரில் உள்ளார். கௌதமரின் சாபத்திற்குள்ளான இந்திரன் இவ்விறைவனை வழிபட்டு விமோசனம் பெற்றதாகக் கூறப்படுகிறது. 1977ல் வீசிய புயல் மற்றும் இயற்கையின் சீற்றத்தால், வேடசந்தூர் அருகே உள்ள அணைக்கட்டு உடைந்து, குழகனாற்றில் வெள்ளம் ஏற்பட்டு, ஊரும் கோவிலும் அழிவைச் சந்தித்தன. பின்னர், கோவில் பக்தர்களால் சீரமைக்கப்பட்டதாக ஒரு குறிப்பு கூறுகிறது. இது ஒரு தேவாரத் திருத்தலம்.
மூலவர்: ஸ்ரீ கல்யாண விகிர்தேஸ்வரர், அம்பாள்: பண்ணேர்மொழியம்மை. மூலவரான ஸ்ரீ கல்யாண விகிர்தேஸ்வரர் சிவலிங்க வடிவினராக மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ளார். இது ஒரு சுயம்பு லிங்கம். ஐந்தடி உயரம் கொண்ட அழகிய சிவலிங்கத் திருமேனி கம்பீரமாக தரிசனம் தருகின்றது. சுவாமி கோஷ்ட மூர்த்தங்கள் யாவும் அழகாக அமைந்துள்ளன. கிழக்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் பண்ணேர்மொழியம்மை எனப்படும் மதுரபாஷிணி எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். அபய வரத முத்திரைகளுடன் கூடிய நான்கு திருக்கரங்களுடன் அழகே உருவாகக் காட்சி தருகின்றாள். இவருக்கு விகிர்தேஸ்வரி என்றொரு பெயரும் உண்டு. வலச்சுற்றில் ஸ்ரீ நடராஜர் சபை, நவகிரகங்கள், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சனீஸ்வரர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். அறுபத்திமூவர் திருவுருவங்களின் கீழ் அவரவர்களைப் பற்றிய குறிப்புகள் விவரமாக எழுதப்பட்டுள்ளன. ஆறுமுகனின் திருவுருவம் மிகவும் அழகானது. ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட பீடம், மயில் ஆகியன அழகுற செதுக்கப்பட்டுள்ளன. மயில் காலை ஊன்றியுள்ள விதம் தனி அழகு.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.