அருள்மிகு பிரசன்ன வேங்கடரமணசுவாமி திருக்கோவில் (பாண்டமங்கலம்)
God Name : ஸ்ரீ கல்யாண பிரசன்ன வேங்கடரமண சுவாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
ராணிப்பேட்டை
Call : +91-
இக்கோவிலின் கருவறை பஞ்சபாண்டவர்களால் கட்டப்பட்டது. இக்கோவிலின் ஒவ்வொரு இடமும் ஒவ்வொருவரால் கட்டப்பட்டது என்பர். 2000 வருடங்களுக்கு முந்தைய கோவில். பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டிருந்தபோது அழகிய சோலைகளுடைய இவ்வூரில் சிறிது காலம் தங்கினார்கள். இங்கு ஆதியில் வராஹ புஷ்கரிணியும் வராஹரின் சந்நிதியும் இருந்தது கண்டு வழிபட்டனர். திருப்பதி போல் இங்கும் பெருமாள் இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தார்கள். அவர்களின் பக்தியான வேண்டுகோளுக்கு செவி சாய்த்து பெருமாள் இங்கு பிரசன்னமானார். இதனால் பிரசன்ன வேங்கடரமண சுவாமி எனும் திருநாமம் கொண்டார். மைசூர் மகாராஜா கொண்ட தீராத வயிற்றுவலி இவ்விறைவனை வழிபட்டதால் பூரண குணமடைந்தது எனக் கூறுவர். இவர் சிதிலமடைந்த தேரை செப்பனிட்டு தேரோட்டம் நடக்க உதவியுள்ளார் எனக் குறிப்பொன்று கூறுகிறது. (தை மாத அஸ்வினியில் தேரோட்டம்).
மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீ கல்யாண பிரசன்ன வேங்கடரமண சுவாமி மிகுந்த வரப்பிரசாதியாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். தாயார் ஸ்ரீ அலர்மேல் மங்கா உடன் எழுந்தருளி அருள் புரிகின்றார். ஞானலட்சுமி சகித ஹயக்ரீவர் சந்நிதி கொண்டுள்ளார். காவல் தெய்வமாக க்ஷேத்ர பாலகர். பாண்டவர்கள் வழிபட்ட நவநீத கிருஷ்ணன் விக்ரகம் பேரெழிலுடன் காணப்படுகிறது. நவக்கிரகங்கள் உள்ளன. பெரிய திருவடி, சிறிய திருவடி, நரசிம்மர், நாகர், ராதா - ருக்மணி சமேத கிருஷ்ணன், லட்சுமி நாராயணர், சக்கரத்தாழ்வார் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். வன்னி மரத்தடியில் பிரம்மா அமர்ந்துள்ளார். செவ்வரளி மாலையும் சிவப்பு வஸ்திரமும் பெருமாளுக்கு அணிவித்தல், திருக்கோடி தீபத்திற்கு நெய் வழங்குதல் போன்ற பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமைதோறும் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபடுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.