அருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோவில் (மாவுரெட்டிப்பட்டி)
God Name : பீமேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
ராணிப்பேட்டை
Call : +91-
கடும் பஞ்சத்தை ஒழிக்க முற்பட்ட பஞ்ச பாண்டவர்கள், அசரீரி வாக்கின்படி, புருஷா மிருகத்தை போரிட்டு அடக்க வந்தனர். மணிமுத்தாற்றங்கரையில் தர்மர் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டுக் கொண்டிருந்தார். இவரிடம் போரிட வந்த புருஷா மிருகம், சிவலிங்கத்தைப் பார்த்ததும் சுற்றி வந்து வழிபடலாயிற்று. ஆற்றங்கரையின் ஐந்து ஊர்களிலும் பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் ஒவ்வொரு சிவலிங்கத்தை நிறுவி பூஜித்து வந்தனர். இதை கண்ணுற்ற புருஷா மிருகம், பஞ்ச பாண்டவர்களிடம் போரிடுவதை விடுத்து சிவலிங்கங்களை சுற்றி வந்து வழிபட்டு தனது கோபத்தைத் தணித்துக் கொண்டது. பின்னர் பஞ்ச பாண்டவர்களுக்கு உதவியது என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் பீமேஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். அழகிய சிவலிங்க மூர்த்தம். பீமன் பிரதிஷ்டை செய்த திருமேனி. பஞ்ச பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பஞ்ச லிங்கங்கள்: 1. சுகவனேஸ்வரர், 2. கரபுரநாதர், 3. வீரட்டீஸ்வரர், 4. பீமேஸ்வரர், 5. திருவேணீஸ்வரர் என்பதாகும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.