அருள்மிகு ஸ்ரீ நல்லேந்திரப் பெருமாள் திருக்கோவில் (தலைமலை)
God Name : ஸ்ரீ நல்லேந்திரப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
ராணிப்பேட்டை
Call : +91-
சிரகிரியின் தமிழ் சொல்லே தலைமலை. 850 அடி உயரம் கொண்டுள்ள மலை. ஒரு மனிதன் மல்லாந்து படுத்திருந்தால் அவனது தலை மற்றும் முகம் எப்படி இருக்குமோ, அவ்வாறே தோற்றம் அளிக்கிறது தலைமலை. ஹனுமன் கொண்டு வந்த சஞ்சீவி மலையை எடுத்த இடத்தில் கொண்டு போய் போடும்படி ஜாம்பவான் கூறியதாகவும், ஹனுமன் தனது வாலால் மலையைக் கட்டி வீசி எறிந்ததில் சிதறுண்டு விழுந்த பகுதியே தலைமலை என்றும் வரலாறு. மூலிகைகள் நிறைந்துள்ளது. விஷ ஜந்துக்கள் தீண்டாத ஸ்தலம். தினமும் இம்மலைக்கு பசுக்களை ஓட்டி வரும் மேய்ப்பவன் ஒருவன் தான் ஓட்டி வந்த காராம்பசுவைக் காணவில்லை எனத் தேடி வந்தபோது, மலை உச்சியில் பசு நிற்பதையும் சிறுவன் ஒருவன் பால் குடித்துக் கொண்டிருப்பதையும் கண்டான். நடந்தவற்றை பண்ணையாரிடம் தெரிவித்துவிட்டு மயக்கமடைந்தான். அன்றிரவே பெருமாள் கனவில் தோன்றி தனக்கு கோவில் எழுப்புமாறு பணித்தார் என ஸ்தல வரலாறு. சனியினால் பீடிக்கப்பட்ட யமன், இந்திரனின் யோசனைப்படி, இத்தலம் வந்து கன்னிமார் சுனையில் நீராடி, நல்லேந்திர பெருமாளை வழிபட்டு, சனி தோஷம் நீங்கப் பெற்றான் என ஸ்தல வரலாறு. ராமர் சுனை, கன்னிமார் சுனை ஆகிய வற்றாத சுனைகள் உள்ளன. கன்னிமார் சுனையில் நீராடினால் சனி தோஷம் நீங்கப் பெறுவர். புத்ர பாக்யம் நல்கும் ஸ்தலம். புத்ர பாக்யம் வேண்டுவோர் நல்லேந்திரர் கோவிலைச் சுற்றியுள்ள கற்படியைச் சுற்றி, முந்தானையைக் கிழித்து தூக்கு கட்டி வந்து நேர்த்திக் கடன் செய்கின்றனர். அந்த துணியை திருக்கோடி தீபமாக ஏற்றுகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புரட்டாசியில் இடி பூஜை நடக்கும். அப்போது கோவில் கட்டடத்தில் விரிசல் ஏற்படுவதும், பெருமாள் கிருபையால் ஒன்று சேர்வதும் அதிசய நிகழ்வுகளாகும். புரட்டாசி சனிக் கிழமைகளில் பெருங்கூட்டம் காணப்படும். தை திருவோணத்தன்று ஏற்றப்படும் திருக்கோடி தீபம் 20 மைல் சுற்றளவுக்கு தெரியுமாம்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ நல்லேந்திரப் பெருமாள் எழுந்தருளி அருள் புரிகின்றார். தமிழில் அருங்கல் நல்லய்யன் என்பார்கள். தானாக வளர்ந்த சுயம்பு மூர்த்தம். கம்பீரமான தோற்றத்துடன் கூடிய அழகான திருமேனி.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.