அருள்மிகு ஆஞ்சநேயஸ்வாமி திருக்கோவில் (நாமக்கல்)

God Name : ஆஞ்சநேயஸ்வாமி

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

ராணிப்பேட்டை

Call : +91-

ராம - ராவண யுத்தம் நிகழ்ந்த காலத்தில், இந்திரஜித்தின் மாயையால் மூர்ச்சையடைந்த லக்ஷ்மணனின் மூர்ச்சையைத் தெளிவிக்க, சஞ்சீவி மலையை எடுத்து வரச் செல்கிறார் ஹனுமார். சஞ்சீவி பர்வதத்துடன் வந்து வானர வீரர்களையும், லக்ஷ்மணனையும் மூர்ச்சை தெளிவித்துவிட்டு, மலையை வைத்துவிட்டுத் திரும்புகையில் வழியில் ஓடிக் கொண்டிருந்த கண்டகி நதியில் கிடைத்த அற்புதமான சாளக்ராமக் கல்லை எடுத்துக்கொண்டார் ஹனுமார். இத்தலத்திலுள்ள கமலாலயக் குளத்தைக் கண்டதும், சிரமப் பரிகாரம் செய்துகொள்ள இங்கு தங்கினார். ஆதியில் இங்குள்ள தபோவனத்துக் குளக்கரையில் மஹாலட்சுமி அமர்ந்து சௌம்ய நாராயணனை நோக்கித் தவம் மேற்கொண்டிருந்தாள். கமலாசினி தவமிருந்த குளக்கரை என்பதாலும், தாமரை மலர்கள் நிறைந்த குளம் என்பதாலும், இக்குளம் கமலாலயம் எனப் பெயருற்றது. இதைக் கண்ணுற்ற ஹனுமன், சாளக்ராமக் கல்லைக் கீழே வைத்துவிட்டு மஹாலட்சுமியைச் சேவிக்கச் சென்றார். குளத்தருகே ஹனுமனின் காலடி காணப்படுகிறது. ஹனுமன் திரும்பி வந்து சாளக்ராமக் கல்லை எடுக்க முயற்சித்துப் தோல்வியுற்றார். கீழே வைக்கப்பட்ட சாளக்ராமக் கல் பெரிய மலையாக வளர்ந்துவிட்டது. அதுவே நாமக்கல் மலை. 'நான் இங்கேயே கோயில் கொள்ளப் போகிறேன் - என்னை தியானித்து நீயும் இங்கேயே இரு' என பகவான் கூற, ஹனுமனும் இங்கேயே கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. பரம்பொருளே மலையாக இருப்பதால், இங்கு தனக்கு விதானம் அமைக்க ஆஞ்சநேயர் உத்தரவு தரவில்லை எனக் கூறப்படுகிறது. ஹிரண்ய வதம் முடித்து உக்ரமாக இருந்த நரசிங்கரைச் சாந்தப்படுத்த மஹாலட்சுமியை வேண்டி நின்ற தேவர்களுக்காக தேவி இங்கு வந்ததாகவும், தேவியின் வேண்டுகோளுக்கிணங்க நரசிங்கர் இங்கு எழுந்தருளியுள்ளார் என்றும் ஸ்தல புராணம் மேலும் கூறுகிறது. நரசிம்ம அவதாரத்தின் அவசியத்தை இங்கு மும்மூர்த்திகள் கூடி விவாதிப்பதாக ஐதீகம். தேவதச்சனான விஸ்வகர்மா ஸ்ரீ ரங்கநாதரை வழிபட்டு அவருக்கு இங்கு கோயில் எழுப்பும் கைங்கர்யத்தைச் செய்தான் என்றும் ஸ்தல புராணம் கூறுகிறது.
மண்டபமோ விமானமோ அமையப் பெறாமல், வானமே கூரையாகக் கொண்டு, திறந்த வெளி கருவறையுடன் எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேய சுவாமி மிகுந்த வரப்பிரசாதி. கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். ஆஜானுபாகுவாக, நெடிதுயர்ந்த திருமேனி. 18 அடி உயரம் கொண்ட அழகான திருவுருவம். கோரைப்பற்கள், மிரட்டும் விழிகள் கொண்ட தோற்றம். கூப்பிய கரங்களுடன் காணப்படுகிறார். வால் தலை மேல் சுருண்டிருக்கிறது. அதன் நுனியில் மணி கட்டப்பட்டுள்ளது. இடுப்பில் வாள் தரித்துள்ளார். ஆஞ்சநேயரின் இரண்டு விழிகளும் நேராக, எதிரே கோவில் கொண்டுள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் பாதக்கமலங்களில் பதிந்துள்ளன. கருடாழ்வார் சந்நிதியிலிருந்து பார்த்தால் இதை உணர முடியும். நல்லெண்ணெய், பால், தயிர் ஆகியவற்றால் திருமஞ்சனங்கள். எலுமிச்சை, துளசி, வெற்றிலை ஆகிய மாலைகளைச் சாற்றுதல், நல்லெண்ணெயில் செய்த உளுந்து வடை மாலை சாற்றுதல் போன்ற நேர்த்திக் கடன்களைச் செய்கின்றனர். வெண்ணெய்க்காப்பு, சந்தனக்காப்பு, புஷ்ப அலங்காரம் - விசேஷமாகக் கருதப்படுகிறது. கமலாலயக் குளக்கரையில் உள்ள அரசமரத்தின் பக்கத்திலுள்ள மண்டபத்தில் ஐந்தடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரின் திருவுருவம் ஒன்று மிகவும் அழகாக இருக்கின்றது. திருவாசியோடு கூடிய அற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிலை. வால் பிரபையைச் சுற்றி வளைவாக நுனியில் மணியோடு உள்ளது. திருவாசியின் இருபுறமும் உள்ள யாளிகளின் மீது சங்கு சக்கரங்கள் உள்ளன. பாதங்களில் காணப்படும் வீரக்கழல்கள் மற்றும் இடையில் செருகியுள்ள குறுவாள் அனைத்தும் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.