அருள்மிகு கொல்லிப்பாவை திருக்கோவில் (கொல்லி மலை)

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

ராணிப்பேட்டை

Call : +91-

தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்த அசுரர்களைக் கொல்லும் பாவையாக இருப்பவள், இங்குள்ள மக்களுக்கு கண்கண்ட தெய்வமாக கொல்லிப் பாவை இருக்கிறாள் எனக் கூறப்படுகிறது. அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய இலக்கியங்களிலும் சங்ககால பாடல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள கொல்லிப் பாவை எனும் காவல் தெய்வத்தை கொல்லி மலையில் தரிசிக்கலாம். பில்லி சூன்யம், ஏவல், செய்வினை நீக்குபவள். கடையேழு வள்ளல்களுள் ஒருவரான வல்வில் ஓரி ஆண்ட பிரதேசம். ஓரி எனும் சொல்லுக்கு ஒப்பற்றவன் எனப் பொருள். ஒரு சமயம் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது ஒரு காட்டு யானையின் மீது அம்பை செலுத்தினான் ஓரி. இவனது வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு யானையைத் தாக்கி வீழ்த்தியதோடு அல்லாமல் சீறிச் சென்ற புலியையும், அதைக் கடந்து அருகே நின்ற மானையும், அடுத்து ஒரு பன்றியையும் சாய்த்துவிட்டு, மரத்தில் ஊர்ந்து கொண்டிருந்த உடும்பையும் துளைத்தது என புறநானூறு விவரிக்கின்றது. இம்மலையின் மூலிகை வளத்தைப் பற்றி மலைவளம் எனும் நூலை காளங்கிநாதர் எனும் சித்தர் எழுதியுள்ளார். ஆகாசசங்கை நீர்வீழ்ச்சி 150 அடி உயரத்திலிருந்து பெரிய ஓசையுடன் விழுகிறது. இதை அருகே சென்று காண 720 படிகளில் கீழே இறங்கி செல்ல வேண்டும்.
மயன் எனும் தேவசிற்பியால் உருவாக்கப்பட்ட அழகான படிமம். அசுரர்களை தனது அழகினால் மயக்கி கொல்வித்ததால் கொல்லிப்பாவை என்ற பெயர் வந்திருக்கக் கூடும். பில்லி சூன்யம், ஏவல், செய்வினை நீக்குபவள். நாய்களுக்கு உணவளித்தால் கொல்லிப் பாவை மகிழ்வாளாம். ரூ.1.25 துணியில் முடித்து வைத்து காணிக்கை செலுத்துகின்றனர். புள்ளிகள் (மரு) இல்லாத எலுமிச்சம்பழம் சமர்ப்பித்து பின்னர் வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர். சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் நிவேதனமாக செய்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.