அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில், காட்டாங்கொளத்தூர்

God Name : காளத்தீஸ்வரர்் விசேஷ மூர்த்தி: ஆபரண நந்தீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

ஸ்தல வரலாறு: தட்ச யாகம் முடிவுற்றதும், பார்வதியைப் பிரிந்த ஈஸ்வரன், பூலோகத்தில் சிறிது காலம் ஓய்வெடுக்க அமர்ந்த ஸ்தலம் இது. சினத்துடன் புறப்பட்ட ஈஸ்வரனைக் காணாமல் பரிதவித்து, அவரைத் தேடி வந்த நந்தி, இத்தலத்தில் அவரைக் கண்டதும் ஆனந்தம் கொண்டு, தன்னை அணிகலன்களால் அழகுபடுத்திக் கொண்டு, ஒரு சிறு துளை வழியாக எட்டிப் பார்த்தது. இதனால் 'ஆபரண நந்தீஸ்வரர்' எனப் பெயர் கொண்டது. பிரதோஷ காலத்தில் ஏராளமான பக்தர்கள் இந்த ஆபரண நந்தீஸ்வரருக்கு நெய்தீபம் ஏற்றுகின்றனர். ஐந்து விதமாகப் பிரிந்த அரவத்தின் துண்டுகள் விழுந்த இடம் இது. அரவம் வந்து விழுந்த இடத்தில் தனி நாகர் சந்நிதி உள்ளது.
மூலஸ்தானத்தில் காளத்தீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். மிகப்ப பெரிய திருமேனி. பாம்பு வடிவ ஜடாரி எனும் சட்ட அலங்காரத்தில் எப்போதும் காணப்படுவார். தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அம்பாள் ஞானாம்பிகை காட்சி தருகின்றாள். பாசம், அங்குசம், அபய, வரத ஹஸ்தங்கள்கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகிய திருமேனி. விசேஷ மூர்த்தியாக ஆபரண நந்தீஸ்வரர் எனும் நந்தியம் பெருமான் காட்சி தருகின்றார். தென்புறத்தில் ராகு - கேது திருவுருவங்களையும், மகா மண்டபத்தில் பிள்ளையார், வள்ளி-தெய்வயானை உடனாய முருகன், அஸ்திர தேவர் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.