அருள்மிகு கரபுரநாதர் திருக்கோவில் (உத்தம சோழபுரம்)

God Name : கரபுரநாதர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

ராவணனின் அழிவிற்கு பின்னர் அவனது சகோதரனான கரன் என்பவன் இலங்கையை தான் ஆள வேண்டுமென ஆசை கொண்டு, இத்தலத்தில் ஒற்றைக் காலில் நின்று கொண்டு தவம் செய்தான். கரன் வழிபட்டதால் இவ்விறைவனுக்கு கரபுரநாதர் எனும் திருநாமம். இவ்வாலயத்து அர்ச்சகர் ஒரு நாள் வெளியூர் செல்ல நேரிட்டதால் அவரது மகனான குணசீலன், ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய முற்பட்டான். லிங்கத்தின் சிரசுப்பகுதி சிறுவனுக்கு எட்டவில்லை. தன்னால் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய முடியவில்லையே என வருந்திய குணசீலனுக்காக, ஸ்வாமி தனது சிரசை சாயத்துக் கொடுத்தார். இதன் பொருட்டே லிங்கத் திருமேனியின் பாணம் சாய்ந்தவாறு உள்ளதாக ஸ்தல வரலாறு. சேர - சோழ - பாண்டிய மன்னர்களை பகைத்துக் கொண்டதால் தேசத்தையும் தன்னையும் இழந்த பாரி மன்னனின் மகள்களான அங்கவை - சங்கவை இருவரும் சகல செல்வங்களையும் இழந்து ஒரு குடிசையில் வாழ்ந்து கொண்டிருந்த சமயம், அங்கு வந்த ஒளவையார் அவர்களை அடையாளம் தெரிந்துகொண்டு, நடந்ததை அறிந்து, அவர்களுக்கு மணமுடிக்க உதவுமாறு, இங்கிருக்கும் விநாயகரை வேண்டினார். விநாயகரின் அருளாலும், மூவேந்தர்களின் ஆசியோடும் இரு பெண்களின் கல்யாணம் இனிதே நடந்தேறியது. விநாயகரே திருமண நிச்சயதார்த்த ஓலை எழுதிக் கொடுத்த ஸ்தலம் என்பதால் இங்கு வழிபடுவோர்க்கு திருமணத்தடை விலகும்.
மூலவர்: கரபுரநாதர்் அம்பாள்: பெரியநாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ கரபுரநாதர். திருமுடி வடக்கு நோக்கி சாய்ந்துள்ளது. பெரியநாயகி அன்னை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பிரகார வலச்சுற்றில் விநாயகர், நாகர்கள், லிங்க மூர்த்தங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். சிவகாமி உடனாய நடராஜர் மற்றும் பிட்சாடனர் திருவுருவங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. வள்ளி - தெய்வயானை தேவியர்களுடன் மயில் மீதமர்ந்த ஆறுமுகன் காட்சி தருகிறார். இந்த சிலையை வடித்த சிற்பி இது போன்ற அழகான சிலையை இனி செய்யக்கூடாதென தனது விரல்களை துண்டித்து கொண்டதாக கூறப்படுகிறது. இத்தலத்தில் நீண்ட தவம் மேற்கொண்ட கரடி சித்தர் கரங்களில் சுவடியும் சின் முத்திரையும் கொண்டு தரிசனம் தருகின்றார். வியாழன்தோறும் இவரை வழிபடுவோர்க்கு சிறந்த ஞானம் கிடைக்கும். காலபைரவர் சந்நிதியின் முகப்பில் அஷ்டபைரவர்களின் சுதைச் சிற்பங்களை சிறப்பாக வடித்துள்ளனர். நவகிரகங்கள் தரிசனம் தருகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.