அருள்மிகு சித்தேஸ்வரசுவாமி திருக்கோவில் (கஞ்சமலை)

God Name : சித்தேஸ்வரசுவாமி

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

மனதிற்கு நிம்மதி தரும் அமைதியான சூழலில் அமைந்துள்ள ஆஸ்ரமம். கஞ்சமலையிலேயே வாழ்ந்து, இறைவனருளால் அஷ்டமா சித்திகளைப் பெற்றவர் கஞ்சமலை சித்தர். இவர் சிவபெருமானை நேரில் பார்த்தவர் எனக் கூறப்படுகிறது. திருமூலரின் சீடர்களுள் ஒருவரான கஞ்சமலை சித்தருக்கு அகோரர், மாளிகைத்தேவர், நாதாந்தர், பரமானந்தர், போகர் ஆகிய ஐந்து சீடர்கள் உள்ளனர். ஸ்ரீ காலாங்கி நாதர் எனப்படும் கஞ்சமலை சித்தர் பல காலம் இங்கு தவமிருந்துவிட்டு, பின்னர் சீனா சென்று வசீகர சக்தி, யோகா, வர்மக்கலை ஆகியவற்றை கற்றுக்கொடுத்தார் என குறிப்பொன்று தெரிவிக்கின்றது. மாசி மாத சிவராத்திரியும், சித்ரா பௌர்ணமியும் திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. சித்தரை அல்லது வைகாசி மாதங்களில் விவசாயிகள், தங்களுக்கு இஷ்டமான தானியங்களை சமைத்து படைக்கின்றனர். ஒவ்வொருவரும் ஒரு பிடி எடுப்பார்கள். யாருக்கு எந்த தானியம் கிடைக்கிறதோ, அவருக்கு அந்த ஆண்டு அந்தக் குறிப்பிட்ட தானியம் நிறைய விளையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
வட்டமான அமைப்புடன் கூடிய விமான கோபுரம் கொண்ட மூலஸ்தானத்தில் கஞ்சமலை சித்தேஸ்வரர் மூலவராகக் காட்சி தருகின்றார். வீராசனத்தில் அமர்ந்த திருக்கோலம். சிரசில் ருத்ராட்ச மாலை தரித்து, சின்முத்திரையுடன் இளம் யோகியாக, தட்சிணாமூர்த்தி கோலத்தில் தரிசனம் தருகின்றார். கிழக்கு பார்த்த சந்நிதி. ஸ்ரீ விநாயகரையும், ஸ்ரீ முருகனையும் உள் மண்டபத்தில் காணலாம். பிரகார வலச் சுற்றில் தெற்கு நோக்கியபடி ஸ்ரீ மாதேச்வரன் எழுந்தருளியுள்ளார். பதினாறு கால் மண்டபத்தில் நவகிரகங்களை தரிசிக்கலாம். மேற்கே காந்த தீர்த்தம் எனும் திருக்குளம் அமைந்துள்ளது. இக்குளத்து நீரில் வெல்லம் கரைத்தால் உடலில் ஏற்படும் உஷ்ணக் கட்டிகள் போய்விடும். குளத்தருகே ஸ்ரீ நந்தியம்பெருமானைக் காணலாம். அரசமரமும் நாகப்பிரதிஷ்டைகளும் உள்ளன. தென்புறமாக பொன்னி எனும் சிற்றோடை, மூலிகைகளை சுமந்து வரும் தெளிந்த நீரோடையாக உள்ளது. ஓடையைக் கடந்து சென்று சித்தர் ஆஸ்ரமத்தை காணலாம். யோகிகளின் படங்கள் உள்ளன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.