அருள்மிகு சாம்பமூர்த்தீஸ்வரர் திருக்கோவில் (ஏத்தாப்பூர்)

God Name : சாம்பமூர்த்தீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

மூலவர்: சாம்பமூர்த்தீஸ்வரர், அம்பாள்: மனோன்மணி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக சாம்பமூர்த்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உமாமகேஸ்வரர் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். ஐப்பசி மாதம் 9 முதல் 15 ஆம் தேதி வரையிலும், மாசி மாதம் முதல் 7 ஆம் தேதி வரையிலும் சூரிய உதய நேரத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரின் நெற்றியில் படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக அமைந்துள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் மனோன்மணி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். விநாயகப் பெருமான், வள்ளி - தெய்வயானை உடனாய முருகப்பெருமான் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். முருகப்பெருமான் மூன்று முகங்கள் முன்புறமாகவும் ஒரு முகம் பின்புறமாகவும் கொண்டு காட்சியளிக்கிறார். சதுர்வேதி லிங்கம் எனப்படும் நான்கு லிங்கங்கள், பஞ்ச லிங்கங்கள், கருவறையின் பின்புறமாக 10 லிங்கங்கள் ஆகியவற்றை தரிசிக்கலாம். வசிஷ்ட நதிக்கரையில் அமைந்த ஐந்து ஸ்தலங்களுள் இது இரண்டாவது ஸ்தலம். பஞ்ச பூத லிங்கங்களுள் இது அப்புலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.