அருள்மிகு ஸ்ரீ காமநாதீஸ்வரர் திருக்கோவில் (ஆறகலூர்)

God Name : மூலவர்: ஸ்ரீ காமநாதீஸ்வரர்் சிறப்பு மூர்த்தம்: அஷ்ட பைரவர்கள்

திருக்கழுக்குன்றம் கோவில்

அரியலூர்

Call : +91-

பஞ்சபூத ஸ்தலங்களுள் வாயு ஸ்தலமாக விளங்குகின்றது. முருகன் பிறப்பதற்கு முன்பாக மன்மதன் இத்தலத்து இறைவனை வழிபட்டதால் காமநாதீஸ்வரர் என்று பெயர் கொண்டார். ரதி தேவியோடு வந்து இவ்விறைவனை வழிபட்ட ஸ்தலம். ஊரைச் சுற்றி ஆறு, அகழிகள் இருந்ததால் ஆறகமூர் எனப் பெயர் கொண்டது. வீதிவுலா சென்ற இறைவன் கோவிலுக்கு திரும்ப தாமதமாகிறதென அம்பிகை கோபம் கொண்டு, கோவில் கதவை சாத்தி விடுவார். ஆருத்ரா தரிசனம் அன்று, ஊர்வலம் முடித்த ஈஸ்வரன், கோவிலுக்கு திரும்புகையில் வழி நெடுக பெண்கள் ஆரத்தி எடுப்பதால் கோவிலுக்கு திரும்ப காலதாமதமாகி விடும். கூட வந்த அர்ச்சகர்களும் ஊர் பெரியவர்களும் சமாதான தூது போவார்கள். கால தாமதத்திற்கான காரணத்தை விளக்குவார்கள். அம்பிகை சார்பில் ஒரு சாராரும், ஸ்வாமிக்காக ஒரு சாராரும் வாதத்தில் வாதம் முற்றி, வாழை மட்டையால் அடித்துக் கொள்வது போன்ற சுவாரஸ்யமான ஊடல்கள் ஏற்படும். பின்னர் கதவு திறக்கப்பட்டு ஸ்வாமி உள்ளே செல்வார். தேய்பிறை அஷ்டமி தினங்களில் நள்ளிரவு 12 மணிக்கு பைரவ பூஜை செய்கின்றனர். ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் புனுகு சாத்தி, உளுந்து வடை மாலை, முந்திரி மாலை ஆகியன சாத்தி, வெல்லம் கலந்த பாயாசம் மற்றும் தயிரன்னம் நைவேத்தியம் செய்கின்றனர். செந்நிற ஆடை, செவ்வரளி பூக்கள், வெண் பூசணி - நெய் தீபம் உகந்தது.
மூலவர்: ஸ்ரீ காமநாதீஸ்வரர், அம்பாள்: பெரியநாயகி, சிறப்பு மூர்த்தம்: அஷ்ட பைரவர்கள். மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ காமநாதீஸ்வரர். தேஜோமய லிங்கம். வசிஷ்ட மகரிஷி பிரதிஷ்டை செய்த லிங்கம். சாந்நித்யமும் அமைதியும் நிறைந்த சந்நிதி. பங்குனி உத்திர நாளன்று சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. அம்பாள் பெரியநாயகி அழகே உருவாக எழுந்தருளியுள்ளார். ஐந்தடி உயரம் கொண்ட திருவுருவம். சதுர்புஜங்கள் கொண்டுள்ளார். எதிரே சிம்ம வாகனத்திற்கு பதில் நந்தி இருக்கின்றது. வலச்சுற்றில் சப்த மாதர்கள், கஜலட்சுமி, நந்தி, அய்யனார், வீரபத்ரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். பிரதோஷ நாயகரின் சிற்பத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். அத்தனை அழகு வாய்ந்தது. வாராஹி - ஜ்யேஷ்டா - ரௌத்ரி ஆகிய மூவரையும் ஒரே கல்லில் வடித்துள்ளனர். மஹாகணபதியின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. அஸிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், கால சம்ஹார பைரவர் ஆகிய எட்டு பைரவர்களும் சிறப்பு மூர்த்தங்களாக எழுந்தருளி அருள் புரிகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.