அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் திருக்கோவில் (சங்ககிரி)

God Name : ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ சென்ன கேசவப் பெருமாள் கம்பீரமாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். அழகான திருவுருவங்கள். சங்கு போன்ற வடிவம் கொண்ட சங்ககிரி மலை 2340 அடி உயரமும், மலை ஏறுவதற்கு படிக்கட்டுகளையும் கொண்டுள்ளது. மலைக்கு அரணாக எட்டுவித ஆஞ்சநேயர்கள் எழுந்தருளியுள்ளனர். ராவண சம்ஹார ஆஞ்சநேயர், விஜயவீரர், கருடமுகர், வாயுபுத்ரர், குகை ஆஞ்சநேயர், வரமுகர், வரசித்தி ஆஞ்சநேயர், நாகப்பாயில் ஆஞ்சநேயர் என எட்டு வித ஆஞ்சநேயர்கள். மலையின் நுழைவுப் பகுதியில் கோட்டை மாரி வீரபத்ரன், வரதராஜர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். நான்கு மலைகள் சூழ நடுவே ஐந்தாவது மலையாக அமைந்துள்ளதால் பஞ்சகிரி என்றும், மலைக்கு மேல் கோட்டை அரண்கள் உள்ளதால் சங்ககிரி துர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது. சித்திரை மாதத் தேர்திருவிழா பிரசித்தம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.