அருள்மிகு சிகாநாதர் திருக்கோவில் (குடுமியான்மலை)
God Name : சிகாநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
சிவகங்கை
Call : +91-
மதுரையிலிருந்து க்ஷேத்ராடனம் செய்யப் புறப்பட்ட சுந்தர பாண்டியன் இவ்வூருக்கு வந்து இறைவனை தரிசிக்க இருப்பதாகத் தகவல் வரவே, இவ்வாலயத்து அர்ச்சகர் வெகு நேரம் காத்திருந்தார். குறிப்பிட்ட நேரம் கடந்தும் அரசன் வராததால், எதிர்பார்த்துக் காத்திருந்த அர்ச்சகர் நடையை மூடிவிட்டு இல்லம் விரைந்தார். சுவாமி மீதிருந்த மாலைகளைக் கழற்றி எடுத்துச் சென்றார். வீட்டில் தான் நேசிக்கும் கணிகை இருந்தது கண்டு அவளுக்கு மாலையை அணிவித்து அழகு பார்த்தார்.
அப்போது அரசன் ஆலயத்துள் வந்து கொண்டிருக்கும் செய்தி அர்ச்சகருக்குத் தெரிவிக்கப்பட்டது. சுவாமி மீது மாலைகள் இல்லாதிருந்தால் அரசன் கோபிக்க நேரிடும் என எண்ணிய அர்ச்சகர் கணிகைக்கு அணிவித்த மாலையைக் கழற்றி எடுத்து, கோவிலுக்குத் திரும்ப எடுத்துச் சென்றார். அரசனுக்குத் தரிசனம் செய்வித்து, பின்னர் அவருக்கு மாலையைக் கழுத்தில் அணிவித்தார்.
மாலையில் முடி ஒன்று இருந்தது கண்ட அரசன் திகைப்படைந்து, முடி வந்த காரணத்தை வினவினான். சுவாமிக்குக் குடுமி இருக்கிறதே.. அவர் சிகாநாதர் அல்லவா? என்று சமாளித்தார் அர்ச்சகர்.
பதிலில் திருப்தி அடையாத அரசன் கோபம் கொண்டு, நாளைக் காலை சுவாமியின் குடுமியைப் பார்க்க வருவோம்..அதுவரை அர்ச்சகர் சிறையில் இருக்கட்டும் என உத்தரவிட்டான். தான் செய்த தவற்றிற்காக மனம் வருந்திய அர்ச்சகர் இறைவனிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டி நின்றார். மறுநாள் அரசனுக்குத் தலையில் குடுமியுடன் காட்சி தந்தார் இறைவன். குடுமியைச் சோதிக்க அரசன் இழுத்துப் பார்த்தான். திருமுடியிலிருந்து ரத்தம் கசிந்தது. தன்னுடைய செயலுக்காக சுவாமியிடம் மன்னிப்பு கேட்ட அரசன், அர்ச்சகரை விடுவித்தான். இதனால் சுவாமிக்குக் குடுமிநாதர் எனப் பெயர் வந்ததாக ஸ்தல வரலாறு.
இது, குகை போன்று குடைந்தெடுக்கப்பட்ட குடைவரைக் கோவில். சிறிய கருவறையும் அதன் முன்பாக தாழ்வாரமும், மலையிலிருந்து குடையப்பட்டுள்ளது. உட்குகை 24 அடி உயரம் - 12 அடி அகலம் - 9 அடி ஆழம் கொண்டுள்ளது. தாழ்வாரத்திற்குச் செல்ல ஒன்பது படிக்கட்டுகளும், கருவறைக்குச் செல்ல மூன்று படிக்கட்டுகளுமாக மொத்தம் 12 படிக்கட்டுகள் குடையப்பட்டுள்ளன. வாசலில் இருபுறமும் ஏழடி உயர துவாரபாலகர்கள். முடி, காது, கழுத்து, கை ஆகியவற்றில் அலங்காரம் செய்துள்ளனர். இவை அனைத்தும் குடையப்பட்டவையே.
கருவறையும் அதனுள் எழுந்தருளியிருக்கும் லிங்கமும் குடையப்பட்டவை. மூலவரின் பெயர் சிகாநாதர்.
அகிலாண்டேஸ்வரி அன்னை சந்நிதி முன்பாக அறுகோண வடிவ மண்டபம் இருக்கிறது. புதுக்கோட்டை மன்னர்கள் இங்குதான் பட்டம் கட்டிக்கொள்வார்களாம்.
குகைக்கோவிலை ஒட்டி இரண்டு மண்டபங்கள் உள்ளன. தென்கோடியில் உள்ள ஒரு பாறையின் சரிவில் வலம்புரி விநாயகர் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஐந்தடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. விநாயகருடைய துதிக்கை அவருடைய வலது கைக்குச் செல்வதைப் போல் செதுக்கியுள்ளனர்.
வட கோடியில் உள்ள சரிவுப் பாதையில் அறுபத்துமூவரை செதுக்கியுள்ளனர். பார்வதி - பரமேஸ்வரன் ரிஷபாரூடராகக் காட்சி தருகின்றார். ஆயிரங்கால் மண்டபமும், அதன் தூண்களும், சிற்பங்களும் வியக்கத்தக்க வகையில் செதுக்கப்பட்டுள்ளன. ராசி மண்டபத்து விதானத்தில் 12 ராசிகளும் பொறிக்கப்பட்டுள்ளன.
குடைவரைக் கோவிலுக்கும் வலம்புரி விநாயகருக்கும் இடையே பல்லவ கிரந்தத்தில் சங்கீத வியாசம் ஒன்றை செதுக்கியுள்ளனர். எழுத்துக்கள் தெளிவாகவும் விளக்கமாகவும் இருக்கின்றன.
குடைவரைக் கோவிலை மேலக்கோவில் அல்லது திருமேற்றளி என்று அழைப்பார்கள். இதனருகே பாண்டிய பாணியில் கட்டப்பட்ட கோவிலில் அன்னை சௌந்தர நாயகியும் மூலவராக சுவாமி திருமேற்றளி மகாதேவரும் எழுந்தருளியுள்ளனர்.
மலை உச்சியில் சுப்ரமண்ய சுவாமி கோவில் கொண்டுள்ளார். சுழன்று செல்லும் படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல வேண்டும். வடக்கே அண்ணன் கிணறு, தம்பி கிணறு என இரண்டு கிணறுகள் உள்ளன. அதன் ஜலம் ஊர் மக்களுக்குப் பயன்படுகின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.