அருள்மிகு முசுகுந்தேஸ்வரர் திருக்கோவில் (கொடும்பாளூர்)
God Name : முசுகுந்தேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் முசுகுந்தேஸ்வரர். மூவர் கோவில், ஐவர் கோவில் காணப்படுகின்றன. தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பில் உள்ளது. தினசரி ஒரு கால பூஜை செய்யப்படுகிறது. இடங்கழி நாயனார் அவதரித்து முக்தி பெற்ற ஸ்தலம் இது. சிவத்தொண்டு ஒன்றையே லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர் இடங்கழி நாயனார். இவர் வேளாளர் குலத்தில் பிறந்த மன்னன். தன் சொத்து முழுவதையுமே சிவனடியார்களுக்கும் சிவத்தொண்டிற்கும் செலவு செய்து வந்தவர். இவ்வூரைச் சேர்ந்த வேறொரு சிவ பக்தன் மாகேஸ்வர பூஜை செய்து அன்னமிட்டு வந்தான். அடியார்களை இறைவனாக பாவித்து பூஜை செய்வதையே மாகேஸ்வர பூஜை என்பர். அவனது சொத்து முழுவதும் கரைந்ததும், நெற் களஞ்சியத்து நெல்லைத் திருடி அன்னமிட்டு வந்தான். அரசனின் ஆட்கள் அவனைப் பிடித்திழுத்துப் போய், அரசன் முன்பாக நிறுத்தினர். அடியார்களுக்கு தொண்டு செய்யவே இவன் அப்படி செய்தான் என்பதை தெரிந்து கொண்ட அரசன், அவனை தண்டிக்காது விட்டு விட்டான். இப்படி போட்டி போட்டுக் கொண்டு அடியார்களுக்கு தொண்டு செய்த ஸ்தலம் இது, எனக் குறிப்பொன்று கூறுகிறது. இது ஒரு தேவார வைப்புத்தலம். கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார் (விராலிமலையிலிருந்து வருகிறார்). கோவிலருகே உள்ள சிவனடியார்களது வீட்டில் சாவி உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.