அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் (நார்த்தாமலை)

God Name : இல்லை

திருக்கழுக்குன்றம் கோவில்

சிவகங்கை

Call : +91-

நாரத மகரிஷி முத்துமாரியை வழிபட்டு நற்பலன்களை அடைந்த ஸ்தலம் என்பதால் நாரதர்மலை எனப் பெயருற்று பின்னர் மருவி நார்த்தாமலை என்றானதாக கூறுவர். நகரத்தார் எனும் வணிகர்கள் இங்கு வசித்தபோது கோவில் நிர்வாகத்தை கவனித்திருந்தனர் என்றும் அவர்களின் பெயரால் நகரத்தார் மலை என அழைக்கப்பட்டு பின்னர் மருவி நார்த்தாமலை என்றானதாக கூறப்படுவதுண்டு.
கொடிமரம், பலிபீடம், சரவணபவ எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மணி மண்டபம் ஆகியவற்றை கடந்து வந்து இடது புறமாக இருக்கும் விநாயகரிடம் ஆசி பெற்று வலச்சுற்றை தொடங்கலாம். மூலஸ்தானத்தில் மூலவராக முத்துமாரியம்மன் கிழக்கு பார்த்து அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டு சிம்ம வாகனத்தில் கம்பீரமாக அமர்ந்து அருள்பாலிக்கின்றாள். சிரசில் அக்னி மகுடம். மேற்கரங்களில் உடுக்கையும், வஜ்ராயுதமும் ஏந்தியும், கீழ்க் கரங்களில் கத்தியும் கபாலமும் ஏந்தியும் காணப்படுகிறாள். வலது காதில் பத்ர குண்டலம், இடது காதில் மகர குண்டலம் அணிந்துள்ளார். மிகுந்த வரப்பிரசாதி. முத்துமாரியம்மன் இங்கு முருகனின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். வடபுறமாக உள்ள சுவரில் பொதிந்துள்ள கல்லிலான முருகனின் யந்திரம் விசேஷமானது. அலங்கார பல்லக்கு ஒன்றில் பூக்களை எடுத்து வந்து நடத்தும் பூச்சொரிதல் விழா பங்குனி மாதத்தின் முதல் ஞாயிறு தொடங்கி 10 நாட்களுக்கு நடக்கும். திருவிழாவின்போது பால்குடம், காவடி தூக்குதல், அலகு குத்துதல், மாவிளக்கு போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். தேரில் பவனி வரும் அம்மனைக் காண கூட்டம் அலைமோதும். ஜம்புகேஸ்வரரின் கோவில் ஒன்றும் இவ்வூரில் இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.